கிழக்கு மாகாண விளையாட்டு போட்டியில் பட்டிருப்பு வலயம் முதலிடம்....

 கிழக்கு மாகாண விளையாட்டு போட்டியில் பட்டிருப்பு வலயம் முதலிடம்....

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டியில் பட்டிருப்பு கல்வி வலயம் 179 புள்ளிகளை பெற்று முதலிடத்தை வென்றுள்ளது.
கந்தளாய் லீலாரத்தின மைதானத்தில் ஐந்து நாட்கள் நடைபெற்று கடந்த (23) நிறைவடைந்த இந்த போட்டியில் முதலிடம் பெற்ற பட்டிருப்பு கல்வி வலயத்தில் செட்டிபாளையம் மகாவித்தியாலயம் 9 தங்கப்பதக்கங்களையும், களுதாவளை மகா வித்தியாலயம் 8 தங்கப்பதக்கங்களையும் வென்றமை குறிப்பிடத்தக்கது.
திருக்கோவில் கல்வி வலயம் மற்றும் அக்கரைப்பற்று கல்வி வலயங்கள் தலா 92 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தை வென்றுள்ளன.
கிழக்கு மாகாண பாடசாலை மட்ட மெய்வல்லுனர் போட்டிகள் கடந்த 19.09.2023 தொடக்கம் 23.09.2023 வரை இடம்பெற்று முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments