காத்தான்குடியில் சுற்றுலாத் துறை தொடர்பில் போக்குவரத்து வசதி வழங்குநர்களுடனான கலந்துரையாடல் ..............

 காத்தான்குடியில் சுற்றுலாத் துறை தொடர்பில் போக்குவரத்து வசதி வழங்குநர்களுடனான கலந்துரையாடல் ..............

காத்தான்குடி பிரதேசத்தில் துரிதமாக வளர்ந்து வரும் சுற்றுலா துறையை ஒழுங்குபடுத்திக் கட்டமைத்தல் தொடர்பில், போக்குவரத்து வசதி வழங்குநர்களுடனான கலந்துரையாடல் பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் தலைமையில் (18) பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இதன் போது சுற்றுலாத் துறையில் வாகன சாரதிகளின் பங்களிப்பு, போக்குவரத்தின் போது சாரதிகளுக்கு ஏற்படும் பல்வேறு சிக்கல்கள், வீதியில் மக்கள் கூட்டமும் வாகனங்களினதும் நெரிசல் போன்ற விடயங்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்டன.
அத்துடன் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் வீதி அபிவிருத்தித் திணைக்களம் போன்ற நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, பிரதேசத்தில் வினைத்திறனான சுற்றுத்துறையை முன்னெடுப்பதற்கு போக்குவரத்துக்கு தடையாக காணப்படும் விடயங்களை சீர்படுத்துவதற்கான ஒத்துழைப்புக்களைப் பெறுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.தனுஜா, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், முச்சக்கர வண்டி, வேன், பஸ் என்பவற்றின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Comments