வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு.......
பெரெண்டினா நிறுவனத்தின் 'உங்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பும் லைஃப் லைன்' நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தெரிவான பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
போரதீவுப்பற்று பிரதேச உதவிப் பிரதேச செயளாலர் வி.துளாஞ்சனன் அதிதியாக கலந்து கொண்டு 40 பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்தார். நிகழ்வில் பெரெண்டினா நிறுவன உத்தியோகத்தர்கள், பயனாளிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment