சுற்றுலா தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் சுற்றுலா பண்டிகை....
சர்வதேச சுற்றுலா தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் சுற்றுலா பண்டிகையானது மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவின் தலைமையில் மாவட்ட செயலக வளாகத்தில் இன்று திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் மாவட்டத்தில் சுற்றுலா துறையினை அபிவிருத்தி செய்வதனால் மாவட்டத்தில் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதுடன் நாட்டிற்கு அதிக வருமானத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய ஒரு துறையாக இத்துறை காணப்படும் என தெரிவித்தார்.
இதன் போது ஒல்லாந்தர் கோட்டையை பார்வையிடுவதற்கு வருகை மேற்கொண்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் கருத்துக்கள் இதன் போது பரிமாறப்பட்டதுடன் அவர்களினால் பாடல் இசைக்கப்பட்டதுடன் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களை பிரதிபளிக்கும் மாணவ மாணவிகளின் கண்கவர் நடன நிகழ்வுகளும் அரங்கை அலங்கரித்திருந்தது.
இதன்போது உள்ளுர் உற்பத்தியாளர்களினால் பாரம்பரிய உணவுப்பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டதுடன் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதற்காக படகு சவாரி மேற்கொள்ளபட்டது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment