நாளை விழாக்கோலம் பூனவுள்ள மிக்கல்-சென்றல் மோதும் கிரிக்கெட் சமர்.......

 நாளை விழாக்கோலம் பூனவுள்ள மிக்கல்-சென்றல் மோதும் கிரிக்கெட் சமர்.......

புனித மிக்கல் கல்லூரி தமது 150வது வருடத்தை முன்னிட்டு 2023ம் ஆண்டு Battle of the  Singingfesh கிரிக்கெட் போட்டியை மிகச்சிறப்பாக நடாத்த திட்டமிட்டுள்ளது. இப்போட்டியானது மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரிக்கும், மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கும் வருடந்தோறும் ஒரு சினேகபூர்வமான போட்டியாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ஒவ்வொரு வருடமும் பலத்த எதிர்பார்ப்புக்களுடன் நடைபெறும் இப்போட்டியானது, இவ்வருடம் இரட்டிப்பு எதிர்பார்ப்புடன் இரு பாடசாலைகளும் மோதவுள்ளது. இப்போட்டியானது நாளை (26) காலை 9.00 மணிக்கு மட்டக்களப்பு சிவானந்தா மைதானத்தில் நடைபெறவுள்ளது.





Comments