மண்முனை வடக்கில் சந்தைப்படுத்தல் பகுப்பாய்வு தொடர்பான நிகழ்ச்சித் திட்டம் ...........

 மண்முனை வடக்கில் சந்தைப்படுத்தல் பகுப்பாய்வு தொடர்பான நிகழ்ச்சித் திட்டம் ...........

குறைந்த வருமானம் பெறும் மற்றும் தற்காலிக பொருளாதார நெருக்கடிக்குள்ளான குடும்பங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படுகின்ற வாழ்வாதார உள்ளூர் கருத்திட்டங்கள் தொடர்பான பகுப்பாய்வு குறித்த கலந்துரையாடல் மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் க.பரமலிங்கம் தலைமையில் இடம் பெற்றது.
இவ்வமர்வில் குறைந்த வருமானம் பெறுவோராக அஸ்வெஸும திட்டத்தில் இனங்காணப்பட்ட 5460 பயனாளிகளுக்கு பொருத்தமானதும் பிரதேசத்திற்கு ஏற்றதுமான புதிய தொழில்நுட்ப முறையிலான கருத்திட்டங்களை இனங்கண்டு அவற்றிற்கு சிறந்த சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதனூடாக அக்குடும்பங்களின் வறுமை நிலையிலிருந்து மீட்கும் நோக்கத்துடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இந்நிகழ்வில் வளவாளராக மாவட்ட செயலக சமுர்த்தி கருத்திட்ட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.எல்.எம்.அலி அக்பர் கலந்து கொண்டு திட்டம் தொடர்பாகத் தெளிவு படுத்தினார்.
இதன் போது மண்முனை வடக்கு பிரதேச செயலக கிராம நிருவாக உத்தியோகத்தர், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் மற்றும் கிராமமட்ட அமைப்பு பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்

Comments