ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னையின், வருடாந்த திருவிழா நிறைவு.......
கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலமான ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னையின் வருடாந்த திருத்தல திருவிழா கொடியிறக்கத்துடன் (03) நிறைவுற்றது.
மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் பங்கு தந்தை இருதயநாதன் ஜெமில்டன் மற்றும் அருட்தந்தையர்கள் இணைந்து கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுத்தனர்
ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னையின் திருத்தலத்தின் வருடாந்த திருவிழா பங்கு தந்தை இருதயநாதன் ஜெமில்டன் தலைமையில் கடந்த 25 ஆம் திகதி ஆரம்பமாகியது. தினமும் மாலை திருசெபமாலை, மறைவுரைகள் திருப்பலி இடம்பெற்றதுடன் அன்னையின் வருடாந்த திருத்தல திருவிழாவினை சிறப்பிக்கும் வகையில் நேற்றுக் (02) காலை, மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயம் மற்றும் செங்கலடி புனித நிகோலஸ் ஆலயத்தில் இருந்து திருத்தலம் நோக்கிய பாதயாத்திரை இடம்பெற்றன.
பின்னர் மாலை X.I.ரஜீவன் அடிகளாரால் விசேட மறைவுரையுடன், நற்கருணை வழிபாடும், தொடர்ந்து அன்னையின் திருச்சுருவ பவனியும் விசேட திருப்பலியும் இடம்பெற்றது.
திருப்பலியை தொடர்ந்து அன்னையின் திருச்சுருவ பவனியும் திருச்சுருவ ஆசீர்வாதமும் இடம்பெற்றுஇ கொடியிறக்கத்துடன் வருடாந்த திருவிழா நிறைவுபெற்றது .
திருவிழா திருப்பலியில் மாவட்டத்தில் பல பகுதியிலிருந்தும் வருகை தந்து கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு, மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் அன்னதானமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment