ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் முதியோர் ஆன்மீக யாத்திரை.............
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரேஷ்ட பிரஜைகளை மகிழ்விக்கும் நோக்கில் மட்டக்களப்பின் பல பாகங்களுக்கும் விஜயம் மேற்கொள்ளும் முதியோர் ஆன்மீக யாத்திரை இன்று (21) முன்னெடுக்கப்பட்டது.
முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் நிதி அனுசரணை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஒருங்கிணைப்புடன் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் வீ.தவராஜாவின் வழிகாட்டலில் அப்பிரதேசத்தில் வசிக்கும் சிரேஷ்ட பிரஜைகளை மகிழ்விக்கும் நோக்கில் இந்த முதியோர் ஆன்மீக யாத்திரை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
ஆண், பெண் இருபாலாருமாக சுமார் 50 சிரேஷ்ட பிரஜைகள் அடங்கிய இவ்வான்மீக யாத்திரைக் குழுவினை பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.ஏ.சீ.நஜிமுதீன் தலைமையிலான உத்தியோகத்தர் குழாம் அழைத்து வந்திருந்தனர்.
இவ்வான்மீக யாத்திரையின் போது சிரேஷ்ட பிரஜைகள் ஏறாவூர் வாவிக்கரைப் பூங்கா, காத்தான்குடியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் அக்ஷா வடிவிலான பள்ளிவாயல், காத்தான்குடி கடற்கரை மற்றும் 1ம் குறிச்சி மீரா ஜும்ஆ பள்ளிவாயல் உட்பட மட்டக்களப்பு காந்திப் பூங்கா, அங்கு இடம்பெறும் ஓவியக் கண்காட்சி என்பவற்றினை பார்வையிட்டனர்.
இதன் போது பிரதேச செயலக சமூக சேவைக் கிளை அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எஸ்.ஐ.நசூஹா, எம்.பீ.சமீமா, ஜே.எப்.பர்சானா, ஆர். யாழினி, முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.பீ.எப்.பர்ஸானா, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.என்.எம்.சாஜஹான், அலுவலக உதவியாளர் கே.எல்.இஜாஸ் ஆகியோர் இவ்வான்மீக யாத்திரையினை வழிநடாத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment