அதிக புகையினை வெளியிடும் மோட்டார் வாகனங்களைக் கட்டுப்படுத்த மட்டக்களப்பில் திடீர் பரிசேதனை...............

 அதிக புகையினை வெளியிடும் மோட்டார் வாகனங்களைக் கட்டுப்படுத்த மட்டக்களப்பில் திடீர் பரிசேதனை...............

மோட்டார் வாகனங்களால் வெளியிடப்படும் அதிக புகை காரணமாக வளி மாசடைதலை தடுக்க மட்டக்களப்பில் அதிக புகையினை வெளியிடும் மோட்டார் வாகனங்கள் திடீர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன.
இவ்வாறு மோட்டார் வாகனங்களை பரிசோதிக்கும் வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்ட மோட்டார் பரிசோதகர் யூ.எல்.ஏ.வஹாப் தலைமையில் கல்லடிப்பாலம் அருகாமையில் இன்று (13) இடம் பெற்றது.
மாவட்டத்தில் முதல் தடவையாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் நியம அளவீடுகள் திணைக்களம் இணைந்து வளி மாசுபாட்டை குறைக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட இச் செயல் திட்டத்தில் வீதியினூடாகச் சென்ற பல தரப்பட்ட வாகனங்கள் பரீட்சார்த்தமாக பரிசீலிக்கப்பட்டதுடன் புகை தர நிர்ணயத்திற்கு அமையாத வாகனங்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது அதிகளவான நச்சு வாயுவை வெளியேற்றும் வாகனங்கள் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை சீர் செய்வதற்கான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.
இதன் போது நூற்றுக்கு மேற்பட்ட மோட்டார் வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டதுடன் அதிகளவு புகை வெளியேற்றிய வாகனங்களுக்கு எதிராக மோட்டார் போக்கு வரத்து திணைக்களம் மற்றும் போக்குவரத்து பொலிசாரினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அளவீட்டு அலகுகள் சேவைகள் பிரிவின் உதவி அத்தியட்சகர் வி.விக்னேஸ்வரன், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் உதவி பணிப்பாளர் எஸ்.கோகுலன், மோட்டார் போக்குவரத்து திணைக்கள தொழில் நுட்ப உத்தியோகத்தர் என்.எம்.எம்.மர்சூக், பிரதேச செயலக சுற்றாடல் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




Comments