கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டுக்கழகம் சம்பியனாக தெரிவாகியது........
சொறிக்கல்முனை சாந்தகுருஸ் விளையாட்டுக் கழகத்தின் 48வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தமது கிராமத்தில் 'உயிர்நீத்த உறவுகளின் ஞாபகார்த்தமாக' மற்றும் ஆலய திருவிழாவை முன்னிட்டும் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியை நடாத்தியது.
இதன் இறுதி போட்டியில் கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டுக்கழகமும் மண்டூர் FC விளையாட்டுக்கழகமும் மோதி இருந்தன. விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டியில் ஆட்ட நேர முடிவில் கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டுக்கழகம் 4:3 என்ற கோல்களில் சம்பியனாக தெரிவாகியது.
சாந்தகுருஸ் விளையாட்டுக்கழக தலைவர் E.அன்ரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளுக்கு பிரதம அதிதிகளாக வீரச்சோலை பாடசாலை அதிபர் சுதர்சன், காரைதீவு உதவி பிரதேச செயலாளர் திரு.பார்த்தீபன், ஆசிரியர் திரு.குமாரராசா, நாவிதன்வெளி பிரதேச சபையில் பணிபுரியும் திரு.ராஜவேல், ஆசிரியர் திரு.கிறிஸ்டிராஜா, ஆசிரியர் திரு.யூஜின், படுவான்கரை உதைப்பந்தாட்ட சம்மனத்தின் தலைவர் திரு.சசிகரன், மட்டக்களப்பு வயோதிபமட பணியாளர் திரு.ஜெயகுமார், கழக முன்னால் தலைவர் திரு.நிக்ஸன், அருட்சகோதரிகள் மற்றும் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இரண்டு நாட்கள் இடம்பெற்ற போட்டிகளில் மட்டக்களப்பு மாவட்டங்களைச்சேர்ந்த 23 அணிகள் கலந்து கொண்டதுடன் இறுதிச்சுற்றில் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா மற்றும் மண்டூர் FC இரண்டு அணிகளும் கலந்து கொண்டதோடு, ஈஸ்வரா அணியினர் 1வது வெற்றி கிண்ணத்தையும், FC அணியினர் 2வது வெற்றி கிண்ணத்தினையும் மற்றும் பட்டிப்பளை வைரவர் விளையாட்டு கழகத்தினர் 3வது வெற்றி கிண்ணத்தினையும், சொறிக்கல்முனை சாந்தகுருஸ் விளையாட்டு கழகத்தினர் 4வது வெற்றி கிண்ணத்தையும் பெற்றுக்கொண்டனர்.
Comments
Post a Comment