விவேகானந்தா மகளிர் கல்லூரி மாணவிகள் உயர்தரப் பரீட்சையில் சாதனை......
மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா கல்லூரியில் இருந்து 2022ம் ஆண்டிற்கான உயர் தரப்பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்த மாணவிகளைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று (08) இடம்பெற்றது.
விஞ்ஞான பிரிவில் 54 வீத மாணவிகளும், கணித பிரிவில் 70 வீத மாணவிகளும், வர்த்தக பிரிவில் 88 வீத மாணவிகளும், கலை துறையில் 76 வீத மாணவிகளும் இம்முறை சித்தியடைந்துள்ளனர்.
கடந்த காலங்களுடன் ஒப்புடுகையில் இவ்வருட சித்தி வீதம் அதிகரித்துள்ளது. சாதனை மாணவிகளைக் கௌரவிக்கும் நிகழ்வு, கல்லூரி முதல்வர் திருமதி என்.தர்மசீலன் தலைமையில் இடம்பெற்றது.
கல்லூரியின் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் எனப் பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.
Comments
Post a Comment