மட்டக்களப்பு மண்முனைப்பற்று கலைஞர்களுக்கான ஒன்று கூடல்.......
மட்டக்களப்பு மண்முனைப்பற்று கலைஞர்களுக்கான ஒன்று கூடல் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயம் தலைமையில் தாழங்குடா றோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலை மீனாட்சி மரத்தடியில் இடம் (10) பெற்றது.
மண்முனைப்பற்று பிரதேச செயலக கலாசாரப் பேரவையின் ஆலோசனையில் கதிரவன் கலைக் கழகம் மற்றும் கதிரவன் பட்டிமன்றப் பேரவையினால் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.
இதன் போது திறமைகளை வெளிக்காட்டிய கலைஞர்களின் அனுபவ பகிர்வு மற்றும் கலை கலாசார பண்பாட்டு நிகழ்வுகள் என பல்வேறு விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந் நிகழ்வில் மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன், கதிரவன் கலைக்கழகம் மற்றும் கதிரவன் பட்டிமன்றப் பேரவைத் தலைவர் த.இன்பராசா மண்முனைப்பற்று பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர், இந்து கலாசார உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment