களுவாஞ்சிகுடி கண்ணகை அம்மன் கோயில் வீதி மக்கள் பாவனைக்காக கையளிப்பு:பட்டிருப்பு பாலத்தையும் பார்வையிட்டார் அமைச்சர்!!

 களுவாஞ்சிகுடி கண்ணகை அம்மன் கோயில் வீதி மக்கள் பாவனைக்காக கையளிப்பு:பட்டிருப்பு பாலத்தையும் பார்வையிட்டார் அமைச்சர்!!

களுவாஞ்சிகுடி கண்ணகை அம்மன் கோயில் வீதியானது கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீடு மற்றும் ஒரு இலட்சம் கிலோ மீற்றர் திட்டத்தின் ஊடாக வீதி அமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு களுவாஞ்சிகுடியில் நடைபெற்றது.
கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் 8 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 375m நீளமான களுவாஞ்சிகுடி கண்ணகை அம்மன் கோயில் வீதிக்கான காப்பெட் இடும் வேலைத்திட்டம் கடந்த மே மாதம் 14ம் திகதி 2023 ஆரம்பிக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டதுடன் நேற்று (31) சம்பிரதாய பூர்வமாக மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன், போக்குவரத்து நெடுஞ்சாலைகள் ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன மற்றும் நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் ஸ்ரீபாலகம்லத், ப.சந்திரகுமார் ஆகியோரால் களுவாஞ்சிகுடி கண்ணகை அம்மன் கோயில் வீதி மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பிரதேசத்தினையும் போரதீவுப் பிரதேசத்தினையும் இணைக்கும் பிரதான பழமையான பாலமாக பட்டிருப்பு பாலம் காணப்படுகின்றது. குறித்த பாலம் சேமைடைந்துள்ள விடயம் தொடர்பில் பார்வையிட கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனின் அழைப்பில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன வருகை தந்து பார்வையிட்டு கலந்துரையாடினார்.
இந் நிகழ்வில் தமிழ்மக்கள் விடுதலைபுலிகள் கட்சியின் பொதுச்செயலாளர், உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Comments