நாளை மற்றுமொரு சமரான Battle of the Everest சிவானந்தா மைதானத்தில்.......
மட்டக்களப்பின் மற்றுமொரு பாடசாலைகளுக்கிடையிலான சமராக வர்ணிக்கப்படும் Battle of the Everest சமர் நாளை 30.09.2023 அன்று மட்டக்களப்பு சிவானந்தா மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இத்தொடரில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரியும், கல்லாறு மத்திய கல்லூரியும் 10வது தடவையாக மோதிக் கொள்ளும் இப்போட்டியானது இவ்வருடம் மட்டக்களப்பு இந்துக்கல்லுரியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு சிவானந்தா மைதானத்தில் மிகச்சிறப்பாக நடாத்த திட்டமிட்டுள்ளது.
இப்போட்டியானது இவ்விரு பாடசாலைகளுக்கிடையிலும் ஒரு சினேகபூர்வமான போட்டியாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
ஒவ்வொரு தடவையும் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெறும் இச்சமர் இவ்வருடம் எப்பாடசாலை Battle of the Everest வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றும் எனும் எதிர்பார்ப்பில் மோதவுள்ளது. இப்போட்டியானது நாளை (30) காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment