காத்தான்குடி மத்திய கல்லூரியிலிருந்து 54 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு...............
வெளியாகியுள்ள 2022ம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் பிரகாரம், மட்டக்களப்பு காத்தான்குடி மத்திய கல்லூரியிலிருந்து 54 மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இம் மாணவர்களை கௌரவிக்கு நிகழ்வு இன்று (06) பாடசாலை அதிபர் நிஹால் அஹமட் தலைமையில் நடைபெற்றது. மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் அமீரும் நிகழ்வில் கலந்துகொண்டார்.
காத்தான்குடி மத்திய கல்லூரி தேசியப் பாடசாலையிலிருந்து வைத்தியத்துறைக்கு 7 மாணவர்களும், பொறியியல் துறைக்கு 4 மாணவர்களும், உயிரியல் விஞ்ஞானப்பிரிவில் 15 மாணவர்களும், வர்த்தப் பிரிவு, உயிர் முறைமைகள் தொழிநுட்பம் மற்றும் முகாமைத்துவத் துறைகளில் இருந்து தெரிவான மாணவர்கள் உட்பட 54 மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
Comments
Post a Comment