மட்டக்களப்பு சிறையில் இருந்து 40 கைதிகள் விடுதலை.....
சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் (13) திகதி மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 1 பெண் கைதி உட்பட 40 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரனின் ஆலோசனைக்கு அமைவாக இடம்பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படும் நிகழ்வில் பிரதம ஜெயிலர் ஏ.பீ.பானுக தயந்த சில்வா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
சிறு குற்றம் புரிந்த தண்டணைப் பணம் செலுத்தாத கைதிகளே இன்றைய தினம் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment