கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட கிழக்கின் ஓவியத்திருவிழா - 2023.......

 கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட கிழக்கின் ஓவியத்திருவிழா - 2023.......

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கைகள் நிறுவனமும் இணைந்து நடாத்தும் கிழக்கின் ஓவியத்திருவிழா 2023 (21) திகதி சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
21ம், 22ம் மற்றும் 23ம் திகதிகளில் மூன்று நாட்களாக நடைபெறவுள்ள இந்த ஓவியத் திருவிழா கண்காட்சியானது மட்டக்களப்பு காந்தி பூங்காவில் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை நடைபெறவுள்ளது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் மற்றும் சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் புளோரன்ஸ் பாரதி கென்னடி ஆகியோர் கலந்து சிறப்பித்த நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக பல்கலைக்கழக பேராசிரியர்கள், சிரேஸ்ட விரிவுரையாளர்கள், மாவட்ட செயலக கலாசார உத்தியோகத்தர் ரீ.மலர்செல்வன் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மூன்று நாட்களைக் கொண்ட இவ் ஓவிய கண்காட்சியில் உயிர் ஓட்டமுள்ள தத்துருபமான ஓவியங்கள் பல காட்சிப்படுத்தப்பட்டிருப்பதுடன், இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஓவியங்கள் அனைத்தும் பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தலைசிறந்த ஓவியர்களின் கைவண்ணத்தினால் உருவாக்கம் பெற்றுள்ளது.
இக்கண்காட்சியானது தொழில் முறைசார் ஓவியர்களுக்கு சிறந்த ஒரு வாய்ப்பாக அமைந்திருப்பதுடன், அதிகளவான பார்வையாளர்கள் ஆர்வத்துடன் இவ் ஓவிய கண்காட்சியை பார்வையிட்டு வருவதுடன், தம்மை கவர்ந்த சிறந்த ஓவியங்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் பலர் ஈடுபட்டுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.




Comments