செங்கலடி மத்திய கல்லூரி 2014 மாணவர்களினால் நிர்மாணிக்கப்பட்ட சுமார்ட் வகுப்பறை கையளிக்கப்பட்டது........
செங்கலடி மத்திய கல்லூரி 2014 மாணவர்களினால் நிர்மாணிக்கப்பட்ட சுமார்ட் வகுப்பறை கையளிக்கப்பட்டது........
மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட செங்கலடி மத்திய கல்லூரியில் கல்வி பயின்ற பழைய மாணவர்களினால், சுமார்ட் வகுப்பறை நிர்மாணிக்கப்பட்டு பாடசாலைக்கு கையளிக்கப்பட்டது.
2014ம் ஆண்டு உயர்தர பழைய மாணவர்களின் சுமார் 6 இலட்சம் ரூபா பெறுமதியான நிதியில் புனர்நிர்மாணம் செய்ப்பட்டு, மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கு கையளிக்கப்பட்டது.
பாடசாலையில் பிரதி அதிபர் மேகனதாஸ் தேவியின் தலைமையில், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் ஒன்றிய நிர்வாகத்தினரின் பங்கேற்புடன் புதிய சுமார்ட் வகுப்பறையும் திறந்து வைக்கப்பட்டதுடன், இச் செயற்றிட்டம் தொடர்பான விளக்கங்களும் வழங்கப்பட்டன.
செங்கலடி மத்திய கல்லூரியின் 149வது ஆண்டு நிறைவையொட்டி, பாடசாலையின் பழைய மாணவர்களினால் பாடசாலைக்கு பல்வேறுபட்ட பாடசாலைக்கான நலன் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment