புனித மிக்கேல் கல்லூரி ன் 150 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு முத்திரை வெளியீடு....
புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலையின் 150 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு ஞாபகார்த்தமாக (29) ஆகிய இன்று 1973.09.29ல் பாடசாலை ஸ்தாபிக்கப்பட்டதை நினைவு கூறும் முகமாக முத்திரையை வெளியிட்டுள்ளது.
புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலை (St. Michael’s College National School) மட்டக்களப்பு நகர மத்தியில் 1873 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட ஆண்கள் பாடசாலையாகும். இப்பாடசாலை மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை வடக்கு (மட்டக்களப்பு நகர்) பகுதியிலுள்ள 41 பாடசாலைகளில் ஒன்றாகும். இப் பாடசாலையானது இவ்வருடம் 150 ஆவது ஆண்டு நிறைவிற்காக பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று பாடசாலை முத்திரை வெளியிட்டு வைக்கப்ட்டது.
விழாவில் அருட்தந்தையர்கள் பாடசாலை நிர்வாகம், ஆசிரியர்கள், மாணவர்கள், பழையமாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சபையினர், பெற்றோர் சங்கத்தினர் என பலரும் கலந்து சிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Comments
Post a Comment