புனித மிக்கேல் கல்லூரியின் 150வது ஆண்டினை நினைவு சின்னம் கையளிப்பு..

 புனித மிக்கேல் கல்லூரியின் 150வது ஆண்டினை நினைவு  சின்னம் கையளிப்பு..

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 1996ம் ஆண்டு பழைய மாணவர்களினால் கல்லூரியின் 150வது ஆண்டினை நினைவு கூறும் வகையில் நினைவு சின்னமாக ஒரு தொகை பென்ரைவ் (Penrive) (28) அறிமுகம் செய்து வெளியிட்டு இருந்தனர்.

150வது ஆண்டினை நினைவு கூறும் வகையில், கல்லூரியின் நினைவு சான்றாக இந்த பென்ரைவ்களை (Penrive) 1996ம் ஆண்டு பழைய மாணவர்கள் வெளியிட்டு இருந்தனர். இப்பென்ரைவ்கள் (Penrive) கல்லூரி அதிபர் அன்ரன் பெனடிக் ஜோசப் அவர்களிடம் கையளிக்கப்பட்டதுடன், வணபிதா போல் சற்குணநாயகம் அடிகளாருக்கும் வழங்கி வைக்கப்பட்டதுடன் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்களின் பயன்பாட்டுக்காகவும் வழங்கி வைக்கப்பட்டது. 

புனித மிக்கேல் கல்லூரியின் 1996 ஆம் ஆண்டு பழைய மாணவர்களினால் முன்னெடுத்து வரும் பாடசாலைக்கான நலன் செயல்பாட்டின் மூன்றாவது செயற்பாடாக இந்த பென்ரைவ் (Penrive) வழங்கப்பட்டுள்ளது. நிகழ்வில் கல்லூரி 1996 ஆண்டு மாணவர்கள், கல்லூரி ஆசிரியர்கள் என பலர் கலந்துகொண்டனர்


Comments