புனித மிக்கலின் 150ன் ஐந்தாவது தொடர்........
இவ்வுலகை விட்டு பிரிந்தார் Fr.சோமர்ஸ் :
1967 ஜூன் 19, அன்று Fr.சோமர்ஸ் ஒரு விபத்தில் இறக்கின்றார். Fr.சோமர்ஸ் மட்டக்களப்புக்கு வந்த முதல் அமெரிக்க இயேசுசபை குழுவில் ஒருவர். புனித மிக்கல் கல்லூரியியில் தனது பதவிக் காலத்தின் தொடக்கத்தில், உயர்நிலைப் பாடசாலை சான்றிதழ் வகுப்புகளை நடத்துவதற்கு சகல மாணவர்களை சகல கல்லூரிகளிலும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கல்வித் துறை முடிவு செய்ய முயன்ற போது, புனித மிக்கல் கல்லூரிக்காக Fr.சோமர்ஸ் விளம்பரப் பிரச்சாரம் செய்தார். கிழக்கு மாகாணத்தில் புனித மிக்கல் கல்லூரி சிறந்த கல்லூரி என்று காட்டுவதற்கு சாத்தியமான ஒவ்வொரு வாதத்தையும் Fr.சோமர்ஸ் செய்தார்.
மேலும் அவர் பெருமையாக எதையும் கூறவில்லை, ஆனால் புனித மிக்கல் கல்லூரியின் உண்மைகளை மட்டுமே அவர் உறுதியாகக் கூறினார். அவர் எதை எடுத்தாலும், அதில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டவர். இவரது மரணம் யாராலும் எதிர்பாராதததாக இருந்தது, ஆனால் இந்த நேர்த்தியான இயேசுசபை துறவியை திடீரென தூக்கிச் செல்லப்பட்டது அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் அடியாக இருந்தது. இவரது இறுதி ஊர்வலத்தில் பெரும் திரலான மக்கள் கூட்டம் ஆலையடி சோலைக்கு ஊர்வலத்துடன் சென்றது, அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பே இருள் சூழ்ந்து கொண்டது. அந்த அளவுக்கு தாமதமானது .
Fr.ஜோசப் மேரி, Fr.போல் சற்குணநாயகம் குருத்துவத்தில் காலடி:
1968 மார்ச் 27அன்று அருட்தந்தை க்ளென்னி அவர்களால் இயேசு சபை துறவியான Fr.ஜோசப் மேரி அவர்களை புளியந்தீவு புனித மரியாள் ஆலயத்திற்கு நியமிக்கப்பட்டார். அவரும் அவரது இரட்டை சகோதரருமாகிய அல்போன்ஸ் மேரியும் மட்டக்களப்பில் குறிப்பாக இளையவர்களிடையே நன்கு அறியப்பட்டவர்கள்.
1969 ஏப்ரல் 8இல் Fr.போல் சற்குணநாயகம், மற்றும் Fr.அல்போன்ஸ் தியாகராஜா, Fr.ஸ்டானிஸ்லாஸ் அருள்குணநாயகம், Fr.தியோபிலஸ் ரேகல் மற்றும் Fr.பிரக்சித் சில்வா ஆகியோர் ஆயர் கிளெனி அவர்களால் குருக்களாக திருநிலைப்படுத்தப்பட்டனர்.1970ல், ஆயர் க்ளெனி தனது இருபத்தி மூன்றாம் ஆண்டு பதவியை முடித்தார். 1946 ஆம் ஆண்டு அவர் உறுதியுடன் கைகோர்த்து, ஒரு வலுவான மறைமாவட்ட மதகுருமார்களைக் கட்டியெழுப்பி அவர் பணி செய்த வெற்றி முடிவுக்கு வந்தது. 1970ல் அவரைச் சுற்றி நன்கு பயிற்சி பெற்ற, நம்பிக்கைக்குரிய தமிழ், சிங்களவர்கள இளம் குருக்கள், அந்த இடத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தை சாராத பிற மறைமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இருப்பதைக் காண்கிறார். இதனால் திருகோணமலை-மட்டக்களப்பு மறைமாவட்டம் உண்மையான இலங்கை மறைமாவட்டமாக உள்ளது. அதன் எதிர்கால வளர்ச்சி உறுதியானதாக இருப்பதை உணர்கின்றார்.
அப்போதைய பணிப்பாளரான Fr.B.H.மில்லர் அவர்களின் துணிச்சலான முயற்சியின் காரணமாக புனித மைக்கேல் கல்லூரியை தனியார் கட்டணம் வசூலிக்காத கல்லூரியாக தொடர செய்தார். நியூ ஓர்லியன்ஸின் நிதியுதவி மற்றும் மட்டக்களப்பில் உள்ள பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகளின் உதவியினால் பத்து வருடங்கள் கல்லூரி வெற்றி நடை போட்டது.அரசாங்கத்திடம் கையளித்த Fr.பிரடெரிக் லியோ:
இதன் போது இறுதியாக ஒரு இறுக்கமான முடிவை எடுக்க வேண்டிய கட்டத்தில் அப்போது பணிப்பாளராக இருந்த Fr.பிரடெரிக் லியோ எடுக்கின்றார். 1873ம் ஆண்டு டொடக்கம் தம் அயராத முயற்சியால் வளர்த்தெடுப்பட்டு பல குருக்களின் இரத்தம் வியர்வை துளிகள் நிலத்தில் விழ உழைத்து கட்டப்பட்ட அந்த அரண்மனை பொல் இருந்த புனித மிக்கல் கல்லூரியை 1970 பெப்ரவரி மாதம் 02 திகதி அன்று அப்போதிருந்த பணிப்பாளர் புனித மிக்கல் கல்லூரியை அரசாங்கத்திடம் கையளித்தார்.
புனித மிக்கல் கல்லூரியின் ஸ்தாபகர், தலைமை ஆசிரியர் அதிபர்கள் விபரம்
- பாடசாலையை ஆரம்பித்தவா Rev.Fr.பிரான்சிஸ் சேவியர் பிலிப் 1873-1876
- பாடசாலையின் முதல் தலைமை ஆசிரியர் திரு.ஜோசப் ஆபிரகாம் 1876-1924
- Rev.Fr.ஃபெர்டினாண்ட் போனல் இயேசு சபை துறவி 1914- 1917
- Rev.Fr.சார்லஸ் ரீச்சர்ட் இயேசு சபை துறவி 1917-1926
- Rev.Fr.மாரிஸ் பௌட்ரி இயேசு சபை துறவி 1927-1932
- Rev.Fr.சாண்டியாகோ மரியன் இயேசு சபை துறவி 1932-1940
- Rev.Fr.A.இம்மானுவேல் க்ரவுதர் இயேசு சபை துறவி 1940-1957
- Rev.Fr.ஜியோ.H.ரேவுட் இயேசு சபை துறவி 1957-1959
- Rev.Fr.B.ஹென்றி மில்லர் இயேசு சபை துறவி 1959-1960
- Rev.Fr.V.ஞானப்பிரகாசம் இயேசு சபை துறவி 1961-1962
- Rev.Fr.போல் N.பீரிஸ் இயேசு சபை துறவி 1963-1973
Comments
Post a Comment