புனித மிக்கலின் 150ன் நான்காவது தொடர்........

   புனித மிக்கலின் 150ன் நான்காவது தொடர்........ 

குருக்களின் வருகையை கட்டுப்படுத்தப்பட்டது:

இக்காலகட்டத்தில் அரசாங்கம் வெளிநாட்டவர்கள் ஆசிரியர்களாக இருப்பதற்குத் தடை விதித்தது. 1955 இல் அரசாங்கம் புதிய கத்தோலிக்க மறைபரப்புனர்களுக்கு குருக்களை இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. மிகவும் சொற்பமானோருக்கே அனுமதி வழங்கப்பட்டது. இவ்வாறு பல இன்னல்களை சந்தித்து வரும் போது மற்றுமொரு பூகம்பம் வெடித்தது 17 வருட காலம் அதிபராக இருந்த  Fr.கிறவுதர் 1957இல் புனித மிக்கல் கல்லூரியின் அதிபர் பதவியில் இருந்து  ஓய்வுபெற, அடுத்ததாக ஒரு குருவானவரை அதிபராக நியமிக்க தடை பிரப்பிக்கப்பட்டது பின்னர் கடின முயற்சியின்  மத்தியில் அரசாங்கத்தின் அனுமதி பெற்ற பின் Fr.H.ரேவூட் அதிபராக்கப்பட்டார்.

அரசாங்கம் தகுதிவாய்ந்த இலங்கை ஆசிரியர்கள் தேசிய மொழிகளைப் கற்பிக்க முடியும் என தீர்மானம் கொண்டு வந்தது. உதவி பெற்ற பாடசாலைகளை பெற்றுக் கொள்ள 1959 இல் அரசாங்கம் முடிவெடுத்தது.

அறிவியல் கண்காட்சியில் சாதனை புரிந்த மிக்கல்:

1960ல் Fr.B.H.மில்லர் கல்லூரியின் பணிப்பாளர் ஆனார்,  இவ் அறிவியல் கண்காட்சி பற்றிய விபரத்தை கட்டாயம் பதிவிட்டே ஆக வேண்டும், அப்போதே புனித மிக்கல் கல்லூரிக்கு சாதனை விடயமாக காணப்பட்டது. 1955 ஆனி மதம் 10ம் திகதி, இரண்டாவது விஞ்ஞானப் பொருட்காட்சி நடாத்தப்பட்டது. இப் பொருட்காட்சியில் முப்பது சதவீத காட்சிப் பொருட்கள் ஐக்கிய நாடுகளிலும் (UN), மற்றும் மேற்கு நாடுகளில் நடக்கும் கண்காட்சிகளிலே வைக்கப்பட்டிருக்கும் காட்சிப் பொருட்களின் தரமுடையனவாக இருந்தன. 

மூன்றாவது விஞ்ஞானப் பொருட் காட்சி  1960ல் நடாத்தப்பட்டது இதை அமெரிக்க ஐக்கிய நாட்டின் தகவற் பிரிவைச் சேர்ந்த மொறிஸ் அவர்கள் ஆரம்பித்து வைத்தார். இதன் பின்னர், 1964ம் ஆண்டு இலங்கை விஞ்ஞான முன்னேற்றக் கழகத்தினரால் மட்டக்களப்பில் நடத்தப்பட்ட விஞ்ஞானப் பொருட் காட்சியின் போது, எமது கல்லூரி அநேகமாக எல்லாப் பரிசில்களையும் தட்டிக் கொண்டது. இக்கண்காட்சியில் எமது விஞ்ஞான மன்றத்தைச் சேர்ந்த செல்வன் சந்திரரெட்ணம், செல்வன் செல்வம் ஆகியோரால் தயாரிக்கபட்ட 'சூரியனின் சோலார் கதிர்ச் சக்தியை உபயோகிப்பது' பற்றிய காட்சிப் பொருள் அப்பொருட் காட்சியின் மிகச் சிறந்த காட்சிப் பொருளுக்கான பரிசிலைத் தட்டிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. இவ்வகைகளால் எமது கல்லூரி விஞ்ஞான மன்றம் கல்லூரிக்குப் பெருமை தேடித் தந்துள்ளது.

மீண்டும் தனியார்பாடசாலைக்கு சர்ச்சை:

 1960 அக்டோபரில் பின்னர் மீண்டும் அறிவிப்பு வெளியானது, தனியார் பாடசாலைகளை அரசுப் பறிமுதல் செய்யப்படவுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.  நவம்பரில், ஆயர் க்ளெனி, Fr.கிரவுதர் மற்றும் அவரது ஆலோசகர்களுடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தார். அதில் சில முடிவுகள் எட்டப்பட்டது. கல்லூரிகள் எமக்கு மிகவும் முக்கியமானவை  அவற்றைத் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும், இதற்காக இயேசு சபையினர் என்ன தியாகங்களைச் செய்தாவது காப்பாற்ற வேண்டும் என கூறப்பட்டது. 

1960 நவம்பர் 28,  அன்று பிரதமர் அவர்கள் அனைத்து ஆயர்களையும் மற்ற கிறிஸ்தவ மதங்களின் பிரதிநிதிகளையும் சந்தித்தார். இதன் போது கல்லூரிகளை எடுத்துக் கொள்வதே அவர்களின் நோக்கமாக இருந்தது.  .

1960 டிசம்பர் 1 இல் புதிய  சட்டம் நடைமுறைக்கு வந்த போது, புனித மிக்கல் கல்லூரி, புனித  ஜோசப் கல்லூரிகள் நிர்வாகத்தின் விருப்பப்படி தனியார் கல்லூரிகளாக இயங்கும், அரசு நிர்வகிக்கும் கல்லூரிகளாக இருக்காது. இச்சட்டத்தின் கீழ் தனியார் கல்லூரிகளாக செயல்பட, இக்கல்லூரிகள்  பின்வரும் நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.  

  • (அ) அரசின் பொதுக் கல்விக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும்.
  • (ஆ)மாணவர்களுக்கு ஏற்கனவே  வழங்கப்பட்ட அனைத்து வசதிகளையும் சேவைகளையும் வழங்க வேண்டும்.
  • (உ) கட்டணம் வசூலிக்க கூடாது. 
  • (ஈ) மாணவர்களுக்கான தங்குமிடத்தைக் குறைக்கக் கூடாது. 
  • (இ)கல்வி விடயத்தில் கல்லூரிகளுக்கு பொருந்தக்கூடிய எந்தவொரு எழுதப்பட்ட சட்டத்தின் விதிகளுக்கும் இணங்க வேண்டும். அத்துடன் அதே ஊழியர்களை வைத்து கொள்ள வேண்டும் அவர்களுக்கு அதே ஊதியம் வழங்க வேண்டும். போன்றவை கூறப்பட்டன.

முதல் தடவையாக பெண்களை இணைத்துக் கொண்ட மிக்கல்:

பல இழுபறிக்கு மத்தியில் 1961ல் மட்டக்களப்பில் புனித மைக்கேல் கல்லூரி மற்றும் புனித ஜோசப் கல்லூரிகள், தனியார், கட்டணம் வசூலிக்காத கல்லூரிகள் என, கதவுகளை திறக்கப்பட்டன  எனவே இரண்டு கல்லூரிகளிலும் பெண்கள்  சேர்க்கப்பட்டனர், மேலும் சில சகோதரிகள் இவர்களுக்கு கற்பிக்கவும் இவர்களைக் கவனிக்கவும் வந்தனர். இரண்டு கல்லூரிகளிலும் இனைந்து கொள்வதற்கு கூட்டம் அலைமோதியது.

ஆயர் க்ளெனி இன்னும் எங்கிருந்து என்ன நிதி உதவியை எதிர்பார்க்கலாம் என்பதை அறிய காத்திருந்தார், ஆனால் மறைமாவட்டத்தில் உள்ள இயேசுசபையால் இரண்டு கல்லூரிகளுக்கும் கூடுதல் நிதியுதவியை வழங்கவும் முடியவில்லை, ஆயர் பரிந்துரைத்த உதவியை  அவர்களால் வழங்க முடியவில்லை. 

 1962 ஏப்ரல், இறுதியில், புனித மைக்கேல் கல்லூரியின் நிதி உதவிக்காக ஒரு திருவிழா நடாத்தப்பட்டது அது ஒரு பெரிய வெற்றியாக இருந்தது, இந்த திருவிழாக்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு  விளையாட்டுகள் நடந்தன அதிலும் சில சிக்கல்களை கொண்டு வந்தனர், ஆனால் அனைத்தும் தவிடு பொடியாகியது. புனித மிக்கல் கல்லூரியின் நலன்புரிச் சங்கத்தின் உறுப்பினர்கள் தங்கள் அர்ப்பணிப்பான நேரத்தையும் உழைப்பையும் வழங்கி இருந்தனர்.

மட்டு மக்களால் நேசிக்கப்பட்ட Fr.ஹரோல்ட் ஜே.வெபர்:

1965 ஜனவரி  இல், Fr.ஹரோல்ட் ஜே.வெபர், அவரது தொண்டையில் பிரச்சனை உள்ளதை மட்டக்களப்பு வைத்தியர்கக் கண்டு பிடித்திருந்தனர். இது வீரியம் மிக்க புற்றுநோய் என கண்டறிப்பட்டது.  Fr.ஹரோல்ட் ஜே.வெபர் சிகிச்சைக்காக அமெரிக்கா அனுப்பபட்டார். Fr.ஹரோல்ட் ஜே.வெபர் அவர்களது குரல் ஒரு சக்தி வாய்ந்த குரலாக காப்பட்டது, அவரது சாதாரண உரையாடல் கூட, கல்லூரி வளாகம் முழுவதும் கேட்கும், ஆனால் நோய்வாய்பட்டதுடன் அவரது குரல் அமைதியாக  ஒலித்தது. 

இதில் கட்டாயம் Fr.ஹரோல்ட் ஜே.வெபர் அடிகளாரை பற்றி கூறியே ஆக வேண்டும் 1914 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதி அமெரிக்காவின் லூசியானாவில் உள்ள நியூ ஆர்லியன்ஸில் பிறந்தார்.  வழக்கமான படிப்புகளுக்குப் பிறகு, 1946 இல் இலங்கையில் இயேசுசபையின்  புதிய பணிக்காக தன்னார்வலர்களுக்கான அழைப்புக்கு செவி சாய்த்து இலங்கை வருகின்றார். 

அவர் 1947 இன் பிற்பகுதியில் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரிக்கு வந்தடைந்தார், மேலும் அவர் தனது ஐம்பது வருடங்கள் முழுவதும் தன் பணியை மிகச்சிறப்பாக கடைப்பிடித்தார். அவர் ஒருபோதும் புனித மிக்கல் கல்லூரியில் முதல்வராகவோ, பணிப்பாளராகவே, அதிபராகவே, மாணவர் ஆலோசகராகவோ அல்லது விளையாட்டு இயக்குநராகவோ இருந்ததில்லை. இவற்றில் என்ன பெருமை இருக்கின்றது நான் கடவுக்காக ஊழியம் செய்ய வந்துள்ளேன், எனக்கு எல்லோரும் சமம் தான் என்றார். அது  அவருடன் அது மகிமையாக இருந்தது. 

அவர் மட்டும் இல்லை என்றால் மட்டக்களபபில் வெபர் எனப்படும் மாபெரும் மைதானம் உருவெடுத்திருக்காது, 50 களில் கன்னியாஸ்திரிகளுக்கான சோமர்ஸ் பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் தமிழ், உயர்நிலை வரலாறு, இறையியல் என அனைத்தையும் கற்பித்தார். இது மாத்திரமன்றி புனித மிக்கல் கல்லூரியில் உள்ள தன் விடுதியில் மாணவர்களை ஒன்று திரட்டி விளையாட்டு மற்றும் இறையில் படங்களை காண்பித்து தன் பால் இளம் சிறார்களை அழைத்த ஒரு உன்னதர் தான் Fr.ஹரோல்ட் ஜே.வெபர்.

 Fr.ஹரோல்ட் ஜே.வெபர் அடிகளாரின் பயிற்றுவிப்பின் கீழ் 1963ம் ஆண்டு C.S.பீட்டர்ஸ் அவர்களின் தலைமையின் கீழ் புனித மிக்கல் கல்லூரி  கிழக்கு மாகாண சம்பியன்கனளாக தெரிவு செய்யப்பட்டனர்.

Fr.ஹரோல்ட் ஜே.வெபர் அடிகளார் குணமடைய வேண்டும் என மட்டக்களப்பு மக்கள் அனைவரும் மிக உருக்கமாக பிரார்த்தனை செய்தனர். அக்காலத்தில்  டெய்லி நியூஸ் பத்திரிக்கை அவர் விளையாட்டுத் துறையில்  ஆற்றிய சேவைகளைப் பாராட்டி, அவர் மீண்டும் இலங்கைக்கு நலமுடனும் ஆரோக்கியத்துடனும் திரும்புவார் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தும் கட்டுரையை வெளியிட்டது. உண்மையில், நியூ ஆர்லியன்ஸில் உள்ள அமெரிக்க அறுவை சிகிச்சை நிபுணர்கள், தந்தையின் குரல் உறுப்புகளை அழிக்காமல், புற்றுநோய் வளர்ச்சியை அகற்றுவதில் வெற்றி பெற்றனர், இது அவர்களின் முந்தைய சக்தியின் பெரும்பகுதியை படிப்படியாக மீட்டெடுத்தது. ஜூலையில், அவர்  திரும்பி வந்தார், கொஞ்சம் கரகரப்பாக குரல் இருந்தது, ஆனால் அவரது முன்னைய உற்சாகம் எதுவும் இருக்வில்லை .

1967 ஒரு விபத்தில் இறக்கின்றார் ஒரு குருவானவர் இறக்கின்றார் யார் அவர் என்பதை அடுத்த தொடரில் பார்ப்போம்..........

150 கடக்கும் புனித மிக்கல் கல்லூரியின் அரிய புகைப்படங்கள்.....












Comments