புனித மிக்கலின் 150ன் மூன்றாவது தொடர்........

  புனித மிக்கலின் 150ன் மூன்றாவது தொடர்........

Fr.போனால் அடிகளாரின் இழப்பின் பின் சோர்வடைந்திருந்த மிக்கல் கல்லுரிக்குள் உள்நுழைந்தவர் தான் Fr.வெபர் அடிகளார், இவருடன் இன்னும் பல குருக்கள்  அமெரிக்காவில் இருந்து வந்து, மட்டக்களப்பின் தலைவிதியையே மாற்று அளவிற்கு அவர்கள் செய்த சேவையை  இத் தொடரில் பார்ப்போம் வாருங்கள்.......

1940களில் அமெரிக்க இயேசு சபையினர் புனித மிக்கல் கல்லூரியை வந்தடைந்ததுடன், தங்களுடன் கூடைப்பந்து விளையாட்டையும் அழைத்து வந்தனர். 1949 ஜூலை 31அன்று, இயேசுசபை துறவியான Fr.J.V.சோமர்ஸ் அவர்கள் புனித மிக்கல் கல்லூரியின் முதல் அமெரிக்க பணிப்பாளர் ஆனார்.  இதனைத் தொடர்ந்து  1949 செப்டம்பர் 4 ஆம் தேதி, Fr.பெங்லர் அமெரிக்காவிற்கான  தனது பயணத்தை முடித்து இலங்கை  திரும்பினார், இவர் திரும்பும் போது சும்மா திரும்பவில்லை நான்கு புதிய இயேசு சபை துறவிகளை அழைத்து வந்தார். அவர்கள் தான் Fr.F.B.போண்டர்,  Fr.G.H.ரேவுட் இவர்களுடன் தாங்கள் எதிர்காலத்தில்  மட்டக்களப்பில் பல சாதனைகளை படைத்து தங்கள் பெயர்களை பதிக்கப் போவர்கள் என்று தங்களுக்கே தெரியாமல் வருகை தந்தவர்களான Fr.B.H.மில்லர், Fr.E.J.ஹெபர்ட் ஆகியோரும் வருகை தந்தனர், அவர்களும் சாதாரண அருட்தந்தையர்கள் போல் இலங்கையை வந்தடைந்தனர்.

புனித மிக்கல் கல்லுரிக்கான முதல் கூடைபந்தாட்டத்திற்கான அத்திவாரத்தை Fr.ஹாமில்டன் அவர்களின் வருகையுடன்  1950களில் Fr.ரால்ப் ரீமன் கூடைப்பந்தாட்டத்தில் களமிறங்கினார்.

இதற்கிடையில் இலங்கை வந்த Fr.E.J.ஹெபர்ட் ஒரு வருடம் மட்டக்களப்பிலும், மற்றொரு வருடம் திருகோணமலையிலும் இயேசுசபை கல்லூரிகளில் பணியாற்றிய பின்னர், இறையியல் படிப்பிற்காக இந்தியாவின் பூனாவுக்குச் சென்றார். அங்கு அவர் 1954 மார்ச் 24 அன்று பாதிரியாராக நியமிக்கப்படுகின்றார்.

1955 செப்டம்பர் 29ம் திகதி புனித மைக்கேல் கல்லூரியின் கல்லூரி தினமாகிய அன்று  Fr.ஜார்ச் கீவுட் அவர்களால் Fr.சோமர்ஸ் அவர்களை  புனித மிக்கல் கல்லூரியின் பணிப்பாளராக மாற்றினார். 

இதே நேரம் 1955 அக்டோபர் இறுதியில்  புனித மிக்கல் கல்லூரி முதல் தடவையாக அகில இலங்கை கூடைப்பந்து போட்டியில் பங்குபற்றியது. இவர்களை பயிற்றுவிப்பதில் Fr.ரால்ப் ரீமன், Fr.வெபர் ஆகியோரின் அர்ப்பணிப்பான செயற்பாடே முக்கிய காரணமாக இருந்தது.

1956 ஏப்ரலில்  இலங்கைக்கு மீண்டும் வருகின்றார்  Fr.E.J.ஹெபர்ட்  வந்ததும், அவர்  திருகோணமலையில் சென் புனித ஜோசப் கல்லூரியில் தன் பணியை தொடர்கின்றார்.

கால நகர்வில் புனித மிக்கல் கல்லூரியின் பெயர் பலரது மனதினிலும் இடம்பிடித்தது. நல்ல ஆங்கில கல்வி, சிறந்த ஒழுக்கம், விளையாட்டு நிகழ்வுகளில் முதலிடம் என இருக்கும் போது, யாருக்கு தான் தன் பிள்ளையை இக்கல்லூரியில் இணைக்க விருப்பம் இருக்காது, இதனால் 1956 ஆம் ஆண்டில், கல்லூரியில் மாணவர்களை இணைப்பதில் மக்கள் ஆர்வமாக இருந்தனர். இதனால் மாணவர்களுக்கான கற்றலுக்கான வகுப்பறை பிரச்சனை ஏற்பட்டது. 

அப்போது இயேசு சபை ஒரு முடிவை எடுத்தது, அது தான்  மாணவர்களின் அரைவாசியை விடுதியை மூடுவதாக முடிவெடுத்தது. இதனால் வகுப்பறை வசதிகளை  விரிவுபடுத்த முடியும் எனவும் இத்தீர்மானம் எட்டப்பட்டது. இதன் போது மற்றுமொரு விடயமும் மேலாக நோக்கப்பட்டது. விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு படிப்பிற்காக அதிக நேரம் கொடுக்கப்பட்ட போதிலும், அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதாக இருக்கவில்லை,  ஆனால் இவர்களுக்கான பராமரிப்பு, மனித வள உழைப்பு இவர்களுக்கு பணம் செலவு செய்வதிலும் கவலையாக இருந்தது.

1957இல் Fr.கிறவுதர் புனித மிக்கல் கல்லூரியின் அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார், இதன் போது மற்றுமொரு சாதனையை 1959இல் புனித மிக்கல் கல்லூரி செய்து அது தான் இக்கல்லூரியில் புதிதாக நிறுவப்பட்ட  தொலைபேசி கட்டமைப்பாகும்.  இது ஒரு பாரிய வெற்றியாகவே கருதப்பட்டது, இதன் போது முதல் தடவையாக  திருகோணமலையும், மட்டக்களப்பும்  இணைக்கப்பட்டு முதல் தொடர்பானது ஆயருடன் ஏற்படுத்தி கலந்துரையாடப்பட்டது. இது இயேசு சபை அருட்தந்தையர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். ஆயர் அவர்களும் தொலைபேசியில் உரையாடி மகிழ்ந்தார் மட்டக்களப்பில் எப்படிப்பட்ட சாதனை நிகழ்த்தப்பட்டதை பாருங்கள்.

இதில் முக்கியமான ஒரு விடயத்தை கூற விட்டு விட்டேன் மட்டக்களப்பின் பெருமை பூத்த சுவாமி விபுலானந்தர் அடிகளார், புனித மிக்கல் கல்லூரியில் கல்வி கற்று பின்னர் அக்கல்லூரியிலேயே பணியாற்றியது பற்றியது தான்.

 சுவாமி விபுலானந்தர் தம் பன்னிரண்டாம் வயதிலேயே தான் புனித மிக்கல் கல்லூரியில் கல்வி கற்றார். அக்காலத்தில் புனித மிக்கல் கல்லூரியின் அதிபராக Fr.பொனெல் அடிகளார் கடமையாற்றி வந்தார். Fr.போனால் அடிகளார்  கணித பாடத்தைப் போதிப்பதில் ஆற்றல் மிக்கவராக இருந்தார்.

 மயில்வாகனனாரின் (சுவாமி விபுலானந்தரின் முதல் பெயர்) கணித திறமைக்கு வித்திட்ட ஒரு குருவாக Fr.பொனெல் அடிகளார் திகழ்ந்தார். புனித மிக்கல் கல்லூரியில் இருந்து தன் பதினாறாவது வயதில் கேம்ப்றிட்ஜ் சீனியர் பரீட்சையில் தோற்றி முதன்மை நிலையில் சித்தியடைந்தார். இது புனித மிக்கல் கல்லூரிக்கு கிடைத்த வெற்றியாகும். இதன் பின் ஆசிரியராக பணியாற்ற சந்தர்ப்பம் கிடைத்த போது,  தான் கல்வி கற்ற கல்லூரியான புனித மிக்கல் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. எனவே இப்பேர் பட்ட ஒரு உயரிய மகானை உருவாக்கிய பெருமை இந்த புனித மிக்கல் கல்லூரிக்கு கிடைத்தது என்றால் அது இந்த 150வது ஆண்டிற்கு பெருமையல்லவா. 

1960 இல், முக்கியமான ஒரு பணிப்பாளரின் மாற்றம் பல பிரச்சனைகளை சந்தித்தது புனித மிக்கல் கல்லூரி அடுத்த தொடரில் பார்ப்போம்......

D.S.சேனநாயக்கா மட்டக்களப்பிற்கு வந்த போது எடுக்கப்ட்ட புகைப்படம்












Comments