புனித மிக்கலின் 150ன் இரண்டாவது தொடர்........

 புனித மிக்கலின் 150ன்  இரண்டாவது தொடர்........

புனித மிக்கல் கல்லூரியின் முதல் விளையாட்டு போட்டி - 1933

1933 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மறைமாவட்டம் மற்றும் புனித மிக்கல் கல்லூரிக்கு புதியதொரு சகாப்தம் தொடங்கியது, அமெரிக்காவில் இயங்கி வந்த நியூ ஆர்லியன்ஸின் இயேசு சபை மறை மாவட்டத்தின் மிஷனரிகளுக்கு உதவ ஒப்புதல் அளித்திருந்தது. இதன் அடிப்படையில் இயேசு சபை துறவிகளான Fr.ஸ்காலஸ்டிக், Fr.ஜான் டி. லைன்ஹான் ஆகியோர் 1933 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி மட்டக்களப்பை வந்து சேர்ந்தனர். 1934 ஆம் ஆண்டில், இயேசுசபை மற்றுமொரு துறவிகளான Fr.J.ஜான்.ஓகொன்னர்,  Fr. J.W.லாங் (ஆசிரியர்) நியூ ஆர்லியன்ஸில் இருந்து இங்கு வந்து சேர்ந்தனர். 

புனித மிக்கேல் கல்லூரியை உருவாக்குவதில் பாரிய முன்னேற்றம் இருந்த போதிலும், இக்காலம் 19 ஆம் நூற்றாண்டிற்கு அப்பாற்பட்டதாக இருந்தது, இருந்த போதிலும்  அமெரிக்காவின் தொழில்நுட்ப வசதிக்கு பழக்கப்பட்ட துணிச்சலான இளம் அமெரிக்க அருட்தந்தையர்கள், மட்டக்களப்பில் பழமையான விஷயங்களைக் கண்டு அதனை மாற்ற எண்ணங் கொண்டனர். 'அமெரிக்க கல்வியாளர்களின் தலைமையின் கீழ் புனித மிக்கல் கல்லூரியின் சிறுவர்கள் விளையாட்டுக்காக அதிகளவில் செல்கிறார்கள் என்று அருட்தந்தையர்கள் தெரிவித்தனர். அதிகப்படியான போட்டி காரணமாக நாங்கள் எந்தப் பாடசாலையுடனும் போட்டிகளில் பங்கேற்கத் தயாராக இல்லை என்றனர். இதனால்  எங்களை கோழை என்று கூறினால், நாங்கள் போட்டியிட தயாராக உள்ளோம் என முடிவு செய்து, தங்களை கீழ்தரமாக பேசப்பட்ட அணைத்து விதமான விமர்சனங்களுக்கும் முற்று புள்ளி வைப்பதற் போல் ஆரம்பித்து, புனித மிக்கல் கல்லூரி அப்போட்டிகளில் 31 புள்ளிகளைப் பெற்றது, அதே நேரம். இப்போட்டிகளில் பங்குபற்றிய மற்றைய பாடசாலைகள் 13 புள்ளிகளுக்கு மேல் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Fr. கிரவுதர் கல்லூரியின் முதல்வரானார்:


1938 இன் இறுதியில், Fr.இம்மானுவேல் கிரவுதர் கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டார். Fr.ஃபெர்டினாண்ட் பொனல், அவர்கள் மக்களால் போற்றுதலுக்குரிய மனிதராக திகழ்ந்தர்  தனது 72வது வயதில் தொடர்ந்தும் துடிப்புடன் கல்லூரிக்கான பாரிய பணிகளை செய்து கொண்டு கற்றல் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்தார். அதே சமயம் Fr.டுபோட்டிடம்  இருந்து புளியந்தீவு திருச்சபையையும் Fr.ஃபெர்டினாண்ட் பொனல் பொறுப்பேற்றுக் கொண்டு அயராது உழைத்த அந்த மாபெரும் சிகரம் தலைசாய்க்க இடம் தேடி நாளையும் தேடியது. 

புனித மிக்கல் கல்லூரியை இருள் சூழத் தொடங்கியது:

1945 மே 7 அன்று, இரவு 10.30 மணிக்கு புனித மிக்கல் கல்லூரியை ஒரு இருள் சூழ்ந்த கொண்டது, தன் அர்பணிப்பான சேவையை மட்டக்களப்பு மக்களுக்கு குறிப்பாக புனித மிக்கல் கல்லூரிக்கு வழங்கிய அந்த உத்தம மனிதரான  Fr.ஃபெர்டினாண்ட் பொனல் அவர்கள் அமைதியாக தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டார். அவர் மிகவும் கடினமாக உழைத்து புனித மிக்கல் கல்லூரிக்காக உழைத்து உருவாக்கிய அற்புதமான சுவர்கள் இன்றும் கம்பீரமாக இருக்கின்றது 

இப்பாடசாலை கட்டுவதற்காக தளராத அர்ப்பணிப்புடன்  தன் வாழ்வை முழுமையாகக் அர்ப்பணித்த ஒரு மாமனிதர். இவரின் மிகப்பெரிய சாதனையாக 1915 இல்  புனித மிக்கேல் கல்லூரி, மற்றும் மெக்கல்லம் மண்டபம் திறக்கப்பட்டபோது, அது இலங்கையில் உள்ள எந்தப் பாடசாலைகளிலும் இல்லாத சிறந்த அறிவியல் ஆய்வகமாக அங்கீகரிக்கப்பட்டது. Fr.ஃபெர்டினாண்ட் பொனல் அவர்களின் சிந்தனை தம்மிடம் உள்ள இளம் மாணவர்களின் கவனம் எப்போதாவது வேறு திசைகளில் அலைந்து திரிந்தால், அவர் செய்ய வேண்டியதெல்லாம் கரும்பலகையில் நின்று தம் இரு கைகளாலும் ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு விடயங்களை எழுதுவதுதான்! அவர் ஒரு வகையான தனிப்பட்ட விடயங்களை செலுத்துவதன் மூலம் புனித மிக்கல் கல்லூரியில் ஒழுக்கத்தை அன்று கட்டிக்காத்தார். அற்புதமாகவே கரும்பலகை உபயோகத்தை நாடினார். Fr.ஃபெர்டினாண்ட் பொனல் அவர்கள் கல்லூரி அலுவலகத்தில் இருக்கும் வரை எந்தவொரு தெருநாயுமோ, கால்நடைகளும் புனித மிக்கல் கல்லூரி வளாகத்திற்குள் ஊடுருவதற்கு துணிய மாட்டார்கள்.

ஆடி ஓடி திரிந்த கால்கள் படுத்துறங்கியது:

Fr.ஃபெர்டினாண்ட் பொனல்

மட்டக்களப்பில் ஓடித்திரிந்த கால்கள் ஓய்ந்து படுத்துக்கொண்டன, பெருமதிப்பிற்குரிய அம்மாமனிதனை பக்குவமான ஒரு இடத்தில் அடக்கம் செய்ய ஆலையடிச்சோலை தெரிவு செய்யப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் ஆலையயடிச் சோலையில் Fr.ஃபெர்டினாண்ட் பொனல் அடிகளாரின் உடலம் அடக்கம் செய்யப்பட்டது.

இதன் பிற்பாடு மூன்று மாதங்களுக்குப் பின்பு Fr.ஃபெர்டினாண்ட் பொனல் அடிகளாரின்  சகோதரர் பேரறிஞர் சகோ.சார்லஸ் பொனல் அவர்கள்  இறந்தார். அவரையும்  அவரது 'தம்பி' யான Fr.ஃபெர்டினாண்ட் பொனல் அடிகளார் அருகில் ஆலையடி சோலையில் உள்ள மரங்களுக்கு அடியில் புதைக்கப்பட்டது. அந்த இரண்டு அர்ப்பணிப்புள்ள சகோதரர்கள் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள், இவர்களது தந்தையாரான பொன்னேல்ஸ் அவர்கள் ஐந்து குழந்தைகளை தேவாலய சேவைக்கு கொடுத்தார் என்பது வியப்பின் விடயமாகவுள்ளது.

குக்குச்சாமி மட்டக்களப்பில் கால் பதித்தார்:

1946 இல் ஆயர் ரொபிசேஸ் மரணமடைந்தார்,  இதனைத் தொடர்ந்து பல இயேசு சபை குருக்கள் இலங்கைக்கு வரத்தொடங்கினர்.  இரண்டு புதிய இயேசு சபை துறவிகளான Fr.காட்ஃப்ரே குக், Fr.கிளாட் டேலி, அமெரிக்காவிலிருந்து மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரிக்கு வந்தனர். இவர்களில்  Fr.காட்ஃப்ரே குக் புனித மிக்கல் கல்லூரியின்  விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார், Fr.கிளாட் டேலி தமிழ் படிக்க நியமிக்கப்பட்டார். Fr.லெங் தனது விடுமுறையிலிருந்து திரும்பிய போது, மேலும் நான்கு இயேசு சபை துறவிகள்  டிசம்பர் 19 ஆம் தேதி மட்டக்களப்புக்கு வந்தனர். அவர்கள் Fr.ஜே.வி.சோமர்ஸ், Fe.பீட்டர் பீச் மற்றும் Fr.அல்போன்சோ மர்மோல் மற்றும் சகோதரர்E.J.சாவடி.

தமிழ் பற்றாளர் Fr.சாண்டியாக்கோ மரியா:

 1947 பிப்ரவரி 17இல், இயேசு சபை துறவியான Fr.சாண்டியாக்கோ மரியா, சூசைமுத்து என அழைக்கப்பட்ட அவர் காலமானார். அவர் மட்டக்களப்பில் பிறந்தவர் 'புனித மிக்கலின் குச்ஷாம்பெயின் தந்தையின் முதல் மாணவர்களில் ஒருவராவார். Fr.சாண்டியாக்கோ மரியா அவர்கள் ஊழியத்திற்கு தமிழ் பற்றிய நல்ல அறிவின் முக்கியத்துவத்தை ஆரம்பத்திலேயே உணர்ந்தார், மேலும் அப்போது எல்லோரும் உலகளாவிய ரீதியில் ஆங்கில மோகத்தில் தமிழ்ப் படிப்பை  புறக்கணித்தனார். தமிழ் மொழியை கற்க ஊக்கமளிக்கவும் இல்லை, இருந்த போதிலும் தனது சொந்த முயற்சியால், அவர் தனது தாய்மொழியில் அறிஞரானார், மேலும் இந்த அறிவை தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை வெளிப்படுத்தி வகுப்பறையில் மட்டுமல்ல, மிஷன் முழுவதும் ஒரு சிறந்த போதகராகப் பயன்படுத்தினார். 

அல்ஹாஜ் முதலியார் அஹமட் சின்ன லெப்பை:

1947 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் திகதி புனித மைக்கேல் கல்லூரியின் பழைய மாணவன் அல்ஹாஜ் முதலியார் அஹமட் சின்ன லெப்பை முதல் பாராளுமன்ற உறுப்பினராக மட்டக்களப்புக்கு தெரிவானார். அவர் ஜார்ஜ் VI மற்றும் எலிசபெத் II ஆகியோரால் இரண்டு முறை பதக்கங்களைப் பெற்ற பெருமைமிக்க மைக்கேலைட் வீரர் ஆவார்.

வந்தார் வெபர்:

1947 செப்டம்பர் இல் Fr.ஹாமில்டன் அமெரிக்காவில் மிகவும் வெற்றிகரமான  பயணத்திலிருந்து திரும்பினார். மேலும் மூன்று இயேசுசபை குருக்களான  எச்.ஜே.வெபர், Fr.ஸ்காலஸ்டிக்ஸ்.W.H.மேக்னேயர், Fr.ஜே.ஜே.ஹீனி ஆகியோர் அழைக்கப்பட, 1947 அக்டோபர் 9 ஆம் தேதி, மூத்த சகோதரர் ஜோ ரைட்  அழைக்கப்பட்டார். இவர் ஷாம்பெயின் மிஷனரிகளில் மூத்தவர் அல்ல, ஆனால் இவர் ஏறக்குறைய 60 ஆண்டுகளாக இயேசு சபையில்  இருந்தாவர். இவர் மிஷனுக்கு வந்தபோது,   கசாக்  உடை அணியவில்லை. இவர்  மிஷன் கூரையில் ஏறி பணிசெய்வது, ஓடுகள் போடுவது, மரம் வெட்டுவது போன்று இலங்கையில் ஒரு தொழிலாளி செய்யும் அனைத்து வேலைகளையும் செய்து வந்தார். இவரை மட்டக்களப்பு மக்கள் பார்த்து  பிரான்சிலிருந்து பணி செய்வதற்காக கொண்டு வந்த  'ஐரோப்பிய கூலி' என மீது மிகவும் பாசமாக இருந்தனர்! மேலும், இவர் தனது வாழ்நாள் முழுவதும் இங்கு இருந்தார், எந்த வேலையும் மிகவும் சோர்வாகவோ அல்லது மிகவும் இழிவானதாகவோ கருதாமல் செய்து உதவி வந்தார். 

1949ல் Fr.B.H.மில்லர், Fr.E.J.ஹெர்பட் அடிகளார் மிக்கல் கல்லூரியில் காலடி பதித்தனர் அடுத்த தொடரில் பார்ப்போம்.....

புனித மிக்கல் கல்லூரியின் அரிய புகைப்படங்கள் பார்ப்போம் வாங்க:

இப்படத்தில் சுவாமி விபுலானந்தர், மட்டக்களப்பின் முதல் பாராளுமன்ற உறுப்பினர் சின்ன லெப்பை, இலங்கையின் முதலாவது இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் அன்டன் முத்துக்குமாரு மூன்று இனத்தவரும் ஒற்றுமையுடன் புனித மிக்கல் கல்லூரியில் கல்வி கற்றதன் சான்று புகைப்படம்.


புனித மிக்கல் கல்லூரியின் கட்டுமான பணிகள் நடைபெற்று கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம்
புனித மிக்கல் கல்லூரி மாணவர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்ட தங்குமிட அறைகள் சகல வசதிகளுடன்
புனித மிக்கல் கல்லூரியில் அப்போதிருந்த விளையாட்டு குழு

புனித மிக்கல் கல்லூரியின் ஒரு தொகுதி மாணவர்கள்

புனித மிக்கல் கல்லூரியின் ஒரு குழுவினர்
 

புனித மிக்கல் கல்லூரியின் கிரிக்கெட், உதைபந்தாட்ட அணியினர்




புனித மிக்கல் கல்லூரியில் மாணவர்கள் கல்வி கற்பதற்காக அமைக்கப்பட்ட வகுப்பறையில் கல்வி நடவடிக்கை
அருட்தந்தை கற்பித்தல் நடவடிக்கையில்

Fr.பொனல் அடிகளாருடன் புனித மிக்கல் கல்லூரியின் பாடசாலை சமூகம்:

 புனித மிக்கல் கல்லூரியின் சாரணர்கள்:

Comments