150 கடக்கும் புனித மைக்கேல் கல்லூரி ஒரு பார்வை......

 150 கடக்கும் புனித மைக்கேல் கல்லூரி ஒரு பார்வை......

மட்டக்களப்பில் ஆரம்ப கல்வி:

மட்டக்களப்பில் கல்வி வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக 1800 தொடக்கத்திலேயே அங்கிலிக்கன் திருச்சபைகள் காலூண்றி இருந்தன, அதிலே தொடக்க ஆங்கில பாடசாலையாக இலங்கையிலேயே தொடங்கப்பட்ட முதல் பாடசாலை தான் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்தி கல்லூரியாகும்.

இதன் பிற்பாடு மட்டக்களப்பின் கல்வி வளர்ச்சியில்  பாரிய முக்கிய பங்கினை  வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கிறிஸ்தவ துறவிகளால் ஏற்படுத்தப்பட்டு பிற்காலத்தில் அது வளர்ச்சியடைந்தது.

இதன் போது 1848ஆண்டளவில் ஒப்லேட் மிஷனரி (Oblates of Mary Immaculate- O.M.I.) அருட்தந்தையர்கள் மட்டக்களப்பிற்கு  வருகை தந்து பல சேவைகளை செய்த கொண்டிருந்த போதிலும், கல்வி சார்பாகவும் பல முன்னேற்றங்களை செய்வதற்கான பல அருட்தந்யைர்கள் இலங்கைக்கு வருகை தந்து காலூண்றி இருந்தனர். 

 இதன் பின்னர் இலங்கையில் உள்ள சிலரும் தங்களை இறை அழைப்பை ஏற்று  குருக்களாக தம் சேவையை இலங்கையின் கல்வி வளர்ச்சிக்காக அர்பணித்திருந்தனர். 

 Fr. பிரான்சிஸ் சேவியர்: இவருடைய புகைப்படம் பெ முடியவில்லை.

1868இல், அக்கால கட்டத்தில்  இலங்கையின் முதல் மதச்சார்பற்ற பாதிரியாரான Fr. பிரான்சிஸ் சேவியர் திகழ்ந்தார். இவர் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவராகவும், உண்மையிலேயே ஒரு விதிவிலக்கான நபராகவும், மண்ணின் மகனாகவும், அக்காலத்தில் மக்களின் மொழி மற்றும் பழக்கவழக்கங்களை முழுமையாக அறிந்தவராகவும், ஆற்றல் மற்றும் தொழில் பக்தியுடைவராகவும் காணப்பட்டார். அப்போது யாழ்ப்பாண மேற்றாசனம் மட்டக்களப்புடன் இணைந்து காணப்பட்டது. 

அக்காலத்தில்  அதிகாரப்பூர்வமாக ஆயராக இருந்த  போன்ஜீனால் மட்டக்களப்பில் 'இரண்டாவது முதல் எதுவுமில்லை' என்ற பாடசாலையை கண்டுபிடித்தார். இக்காலத்தில் மட்டக்களப்பில்  பாடசாலைகளை அமைக்க வேண்டும் எனும் நோக்குடன் யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பிற்கு Fr.பிரான்சிஸ் சேவியர் அவர்களை அனுப்பி வைத்தார் ஆயராக இருந்த  போன்ஜீனா, அப்போது ஐநூறு ரூபாக்களுடன் மட்டக்களப்பை  வந்தடைந்தார். Fr.பிரான்சிஸ் சேவியர் அவர்கள். 

புனித மைக்கேல் கல்லூரி:

1873 ஆம் ஆண்டில், பஸ்கோல் முதலியாரிடம் இனாமாக பெற்ற  காணியில் தன் பெரு முயற்சியால் ஆயர் போன்ஜீனாவின் விருப்பத்திற்கமைய, புனித மரியாள் ஆண்கள் ஆங்கில பாடசாலையை நிறுவி மட்டக்களப்பில் இன்று வரலாற்று சான்றுகளின் ஒன்றாக திகழும்  புனித மிக்கல் கல்லூரிக்கு வழி சமைத்தார். 

 புனித மரியாள் ஆங்கிலப் பாடசாலை, புனித மரியாள் வட்டார மொழிப் (தமிழ்) பாடசாலை,  புனித சிசிலியா பெண்கள் ஆங்கிலப் பாடசாலை ஆகிய மூன்று பாடசாலைகள் அருட்தந்தை பிரான்சிஸ் சேவியர் மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இதில் புனித மரியாள் ஆங்கிலப் பாடசாலை பின் நாட்களில் புனித மிக்கல் கல்லூரியாக மாற்றம் பெற்றது.

 புனித மிக்கல் கல்லூரியின் முதல் தலைமை அதிபராக ஜோசப் சேதுபதி ஆபிரகாம் நியமிக்கப்பட்டார் இவருடன் 03 ஆசிரியர்களுடனும், 57 மாணவர்களுடனும் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.

இதன் பின் காலி மற்றும் திருகோணமலை ஆகிய இரண்டு புதிய மறைமாவட்டங்களை 1893 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி போப் லியோ XIII அவர்களால்  பிரகடணப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டது.  இதன் காரணத்தால் இயேசுவின் சபைக்கு (Jesuits) மட்டக்களப்பு பணிக்காக ஒப்படைக்கப்பட்டது இதன் காரணமாக  1895 இல் புனித மிக்கல் கல்லூரி இயேசுவின் சபையின் (Jesuits) பராமரிப்பில் சென்றது.

ஆயர் லெவிக்னேயின் விருப்பம்:

அப்போது மட்டக்களப்பு ஆயராக இருந்த லெவிக்னே கேட்டுக் கொண்டார். 'எதற்கும் இரண்டாவதாக மட்டக்களப்பில் ஒரு கல்லூரி வேண்டும்' இதில் அவர்  உறுதியயாக இருந்த ஒரு விடயமாகும். இவ்வாறு சென்று கொண்டிருந்த போது  புனித மிக்கல்  கல்லூரிக்கு 1912ம் ஆண்டு ஒரு பெரிய ஆண்டாக இருந்தது, கல்லூரிக்கு நிலையான மற்றும் திறமையான பணியாளர்கள் தேவை, இதற்கு  சில பாதிரியார்களை உண்மையாக  அவர்களில் சிலரை ஈடுபடுத்த விரும்பினார். எனவே, அவர் ஆசிரியர்களுக்கு  விண்ணப்பித்தார், இதனால் மாரிஸ்ட் சகோதரர்கள் மட்டக்களப்புக்கு வர அவர் ஒப்புக்கொண்டனர். 

Fr.பேர்டினன்ட் பொனெல் வருகை:

இதில் முக்கியமான ஒருவராக உள்ளே நுழைகின்றார் Fr.பேர்டினன்ட் பொனெல் இவருடன் ஐந்து சகோதரர்கள் மட்டக்களப்பிற்கு வந்து சேர்ந்தனர். அவர்களின் மூத்தவர் இயக்குனர் சகோ.பிரிலீன் அவருக்கு 29 வயது, அடுத்து சகோ.லாரன்ஸுக்கு அவருக்கு 18 வயது, அடுத்து சகோ.அந்தோணிக்கு 17 வயது மற்றும் சகோதரர்கள் பால் மற்றும் கிறிசோஸ்டம் ஆகியோருக்கு வயதாகவில்லை. மட்டக்களப்பு மக்கள் இந்த இளைஞர்களின் சமயக் குழுவைக் கண்டு கவரப்பட்டனர், மேலும் சிறு வயதுடைய சகோதரர்களை மாணவர்கள் கண்ட போது தங்களின் வயதுடைவர்கள் சுவாமிகளா என்ன செய்வது என்று தெரியவில்லை. இங்கு கற்பிக்க வந்த சகோதரர்கள் பிரெஞ்சுக்காரர்கள், இயக்குனர் மட்டுமே ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடியவராக இருந்தார், எனவே அவர்கள் முதலில் தழிழ் மொழிகளைப் படிக்க வேண்டியிருந்தது. சகோதரர்கள் மட்டக்களப்பில் ஒரு பங்களாவில் தங்க வைக்கப்பட்டனர் (பின் நாட்களில் அது வெபர் ஸ்டேடியம் என்று பெயரிடப்பட்டது) மேலும் அந்த பங்களாவுக்கு 'மாரிஸ் ஸ்டெல்லா' என்று அப்போது அழைக்கப்பட்டது.

 நிரந்தர கட்டிடமும் Fr.பேர்டினன்ட் பொனெல் அவர்களும்:

1912 ஜூலை 16,  அன்று, புதிய மற்றும் பெரிய புனித மிக்கேல் கல்லூரிக்கு நிரந்தரக் கட்டிடம் அமைப்பதற்கான பணியில் Fr.பேர்டினன்ட் பொனெல் அடிகளார் மும்முரமாக செயற்பட்டார். மூலைக்கல் இடும் அந்த விசேடமான விழாவில் இங்கு வருகை தந்த சகல சகோதரர்களும் கலந்து கொண்டனர். அந்நிகழ்வு ஹென்றி மக்கலம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது, மேலும் சிறப்பு விருந்தினர்களில் H.R.பிரிமென் முன்னாள் அரசாங்க அதிபர், மட்டக்களப்பைச் சேர்ந்த C.S.வாகன்,  அப்போதைய அரச அதிபர், W.M.F. சாண்டேமன், J.N.திஸவீரசிங்கம் D.W.ராபர்ட்ஸ், மாவட்ட நீதிபதி, எச்.பாவா, மாகாண சத்திரசிகிச்சை நிபுணர், மற்றும் மாகாணத்தின் அனைத்து வர்த்தகர்கள், முதலியார்கள் மற்றும் பிற முக்கிய மக்களுக்கு. புனித மிக்கேல் கல்லூரி மூத்த தலைமை ஆசிரியரான ஜோசப் ஆபிரகாம், அறிவித்திருந்தார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட கவர்னர் தனது உரையில் கூறினார் 'ஆயர் லெவினே அவர்கள் இங்கு இல்லாதது எனக்கு மிகவும் வேதனையளிப்பதாக என்று கூறியதுடன் அவர் மேலும் ஒரு அறிக்கையை வெளியிட்டார், 'இலங்கைச் சிறுவர்களிடம் நாம் விரும்புவது  தன்னம்பிக்கை  என்றார்.

புனித மிக்கலின் பழைய ஆண்கள் சங்கம்:

1909 இல் புனித மிக்கலின் பழைய ஆண்கள் சங்கம் ஆரம்பிக்கப்ட்டது.  இதனை Fr.அராசினால் தொடங்கப்பட்டது, Fr.D.லாசரஸ் தான் முதல் தலைவராக தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். 1912 இல், கல்லூரி தனது முதல் பதிவுக்காக  ஜூனியர் கேம்பிரிட்ஜ் தேர்வுக்கு கொழும்பில் பதியப்பட்டது. இக்காலத்தில் புனித மிக்கேல் கல்லூரியில் கட்டப்பட்ட ஒரு கட்டடிமே  இலங்கையிலேயே மிக சிறப்பாக வடிவமைக்கப்பட்டடு, கட்டப்பட்ட  கட்டடம் ஆகும். இதற்கு  அறிவியல் மண்டபம், 1913 இல் ஒரு அமைதியான விழாவில் ஆசீர்வதிக்கப்பட்டு மெக்கல்லம் மண்டபம் என்று பெயரிடப்பட்டு திறந்து வைக்கப்ட்டது.'இலங்கைத்தீவில் சிறந்த விஞ்ஞான ஆய்வுகூடமாக அங்கிகரிக்கப்பட்டது. இவ் ஆய்வு கூடத்திற்கான பொருட்கள் பல Fr.பேர்டினன்ட் பொனெல் அவர்களின் முயற்சியால் கிடைக்கப்பெற்றது.

புதிய வகுப்பறையை திறக்க மறுத்த ஆளுனர்:

1915  ஜனவரி 25, அன்று புனித மிக்கல் கல்லூரி ஒவ்வொரு எதிர்பார்ப்புடனும், கட்டுமான பணியில்  Fr.பேர்டினன்ட் பொனெல், சகோ ஜோ ரைட்  மற்றும் அர்ப்பணிப்புள்ள பணியாளர்கள் இடைவேளையின்றி  உழைத்தனர். இதற்கிடையில், கேம்பிரிட்ஜ் தேர்வுகளின் முடிவுகள் வெளியாகின  கல்லூரியின் ஜூனியர் மட்டத்தில் 100% வெற்றியும், சீனியரில்  7:5 மதிப்பெண்கள் பெற்றிருந்தது. இது  ஒரு இரண்டாம் தர கௌரவமாக இருந்தது. ஏப்ரல் மாதத்தில் ஆளுநர்  ரொபேர்ட் சால்மர்ஸ் மட்டக்களப்புக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இதன் போது புனித மிக்கல் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைகளை திறக்கும் படி கவர்னரிடம் கேட்டகப்பட்ட போது புனித மிக்கல் கல்லூரி கட்டப்படும் விடயம் தமக்கு தெரியாத காரணங்களால், புதிதாக கட்டப்பட்ட  வகுப்பறைகளைத் திறக்க மறுத்துவிட்டார். 

கல்வி அதிகாரியால் நிதி உதவி:

மே 3 ஆம் தேதி, கல்வி அதிகாரியான ஹார்வர்ட்,  புனித மிக்கல் கல்லூரிக்கு விஜயம் மேற் கொண்டார். அப்போது அவர் தனதுரையில்  புனித மிக்கல் கல்லூரி கட்டுமானத்திற்கு நிதியை தேடுவதில் அருட்தந்தையர்கள் பெரும் போராட்டத்தை எதிர்நோக்குவதை  தாம் கவணித்து வருவதாகவும் 'பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் உள்ள எங்கள் துணிச்சலான கூட்டாளிகள் களத்தில் காட்டிய அதே தைரியத்துடன் அவர்கள் தடைகளை எதிர்கொண்டனர்' அதே போல் நீங்களும் செயற்படுங்கள் என்று கூறி ஹார்வர்ட், அரசு பெயரில், கட்டட நிதிக்கு, 5,000.00 ரூபாய் அன்பளிப்பாக வழங்கினார். ஆனால் கட்டிட பணிகள் இன்னும் முடிவடைவதாக இல்லை  இன்னும் வெகு தொலைவில் இருந்தது, ஆனால் கட்டப்படும் கட்டிடமும் வரவிருக்கும் விடயங்களும் வடிவாகமும் பார்ப்பதற்கு தெளிவாக இருந்தது. மட்டக்களப்பில் 'இரண்டாவது' கல்லூரி இருக்கும் என்று ஆயர் லெவினின் வாக்குறுதியை நிறைவேற்றியது. பாடசாலையின் நிர்வாகப் பிரிவு மற்றும் அருட்தந்தையர்கள் தங்குமிடங்கள்  இன்னும் கட்டுமானத்தில் இருந்தன, ஆனால் வகுப்பறைத் தொகுதி மற்றும் தங்கும் விடுதி ஆகியவற்றின் கட்டுமான பணிகள் முடிவுற்று இருந்தன. 

Fr.அலோசியஸ் மேரி (இவர் ஒரு இந்து சமயத்தவர் புனித மிக்கல் கல்லூரி மாணவர்  பிற்காலத்தில்  இலங்கையின் முதல் தமிழ் இயேசுசபை துறவியானார்.)

இக்கட்டுமாண பணியில் 150 வேலையாட்கள், 200நாள் உதவியாளர்கள் எனவும் இருந்தனர். மூன்று மாரிஸ்ட் சகோதரர்கள், மேலும் ஊழியர்களான கல்லூரி கீதத்தை இயற்றிய பற்றிக் லீதம், M.A.L..காரியப்பர், K.முத்தையா, ஒரு மாணவர் ஆசிரியர், அவர் பின்னாளில் இயேசுசபை துறவியான Fr.அலோசியஸ் மேரி (இவர் தான் முதல் இலங்கையின் தமிழ் இயேசுசபை குருக்கக் ஆவார்), D.R.டானியல் என அறியப்பட்டு பின்நாட்களில் யேசு சபை துறவியான Fr.R.டானியல் ஆகியோருடன் தலைமை ஆசிரியராக தனது சிறப்பான பணியைத் தொடர்ந்த ஜோசப் ஆபிரகாம் ஆகியோர் செயற்பட்டனர். 1917 ஆம் ஆண்டில், ஜோசப் ஆபிரகாம் புனித மைக்கேல் கல்லூரியின் தலைமை ஆசிரியராக நீண்ட காலமாக தன் சிறந்த சேவை செய்ததற்காக போப் பெனடிக்ட் XV1 அவர்களால்  பதக்கம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

புனித மிக்கல் கல்லூரியின் கீதத்தை இயற்றிய A.R.பற்றிக் லீதம்

ஆர்பாட்டம் இல்லாமல் நடைபெற்ற 50 வருட நிகழ்வு:

1923 புனித மிக்கல் கல்லூரியின் பொன்விழா ஆண்டாகும். புதிய கட்டிடம் இன்னும் கட்டி முடித்தபாடில்லை, இந்த பொன் விழாவை நடத்த மிகச்சிறப்பாக நடத்த அருட்தந்தைகள் தயக்கம் காரணம் காட்டினர் கட்டிடம் முடிக்காமல் எப்படி கொண்டாடுவது என்று. அதே வேளை 1923 ஆண்டில், புனித மிக்கல் கல்லூரிக்கு கேம்பிரிட்ஜ் சான்றிதழ்களுடன் 93 பழைய மாணவர்கள் தெரிவாகினர், இதில் 67 ஜூனியர்களும், 26 சீனியர்களும் அடங்கினர். Fr.பேர்டினன்ட் பொனெனால் மின்பிறப்பாக்கி நிறுவப்பட்டது. இது மட்டக்களப்புக்கு மின்சாரத்தை அறிமுகம் செய்வதில் முன்னோடி முயற்சியாக அமைந்தது.

முதல் தலைமை ஆசிரியர் சேவையை முடித்தார்:

இவரைப்பற்றி கூறியே ஆக வேண்டும் இவர் யாழ்ப்பாணத்தின் கரம்பன் பிரதேசத்தை சேர்ந்தவர்  இந்த கரம்பன் பிரதேசத்தில் இருந்து  இலங்கையின் பல ஆயார்கள் வந்துள்ளார்கள் என்றால் நீங்கள் நம்புவீர்களா, யாழ். மறை மாவட்டத்தின் முதல் சுதேச ஆயர் பேரருட்தந்தை எமிலியானுஸ் பிள்ளை, ஆயர் பேரருட்தந்தை தோமஸ் செளந்தரநாயகம், ஆயர்  பேரருட்தந்தை யோசப் கிங்ஸிலி சுவாம்பிள்ளை, ஆயர் பேரருட்தந்தை L.R.அன்ரனி ஆண்டகை ஆகியோருடன் ஜோசப் சேதுபதி ஆபிரகாமையும் இந்த கரம்பன் பிரதேசம் தந்துள்ளது. 

1925 ஆம் ஆண்டின் இறுதியில், கல்லூரியின் மூத்த தலைமை ஆசிரியர் ஜோசப் சேதுபதி ஆபிரகாம் 49 வருட சேவைக்குப் பிறகு ஓய்வு பெற்றார். அப்போது கருத்து தெரிவித்த  ஜோசப் சேதுபதி ஆபிரகாம்  அவர்கள் 'கவர்னர் மெக்கலம் அவர்கள் 'குடிசை' என்று அழைக்கப்பட்ட புனித மிக்கல் கல்லூரி கட்டடம்,  இன்று இலங்கையின் மிகச்சிறந்த கட்டிடங்களில் ஒன்றான அரண்மனை போன்ற அமைப்பால் மாற்றப்பட்டுள்ளது' என்று அவர் கூறினார். அப்போது அவர் கூறினார் கடந்த நாட்களில் இப்பாடசாலையை கட்டுவதற்காக அருட்தந்தைகள் சந்தித்த எதிர்ப்பை, ஆரோக்கியமற்ற போட்டியைப் பற்றியும் நினைவு கூர்ந்தார்.

1933 ஆம் ஆண்டு மறைமாவட்டம் மற்றும் புனித மிக்கல் கல்லூரியின் புதிய சகாப்தம் தொடங்கியது இது என்னவென்று அடுத்த தொடரில் பார்ப்போம்.....


Comments