வீச்சுக்கல்முனை அன்னம்மாள் தமிழ் வித்தியாலய 150வது ஆண்டு நிறைவு விழா......
மட்டக்களப்பு வீச்சுக்கல்முனை அன்னம்மாள் றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் 150வது ஆண்டு நிறைவு விழா பாடசாலை அதிபர் எஸ்.பிரான்சிஸ் தலைமையில் இன்று (08) இடம்பெற்றது.
150 வருட நிறைவு விழா நினைவு சின்னம் பாடசாலை வளாகத்தில் திரைநீக்கம் செய்யப்பட்டு, நிகழ்வுகள் ஆரம்பமாகின பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் கலந்துகொண்டார்.
150 வருட நிறைவு விழாவை முன்னிட்டு கேக் வெட்டப்பட்டு பாடசாலையின் ஆவணப்பதிவும் வெளியிட்டு வைக்கப்பட்டது. நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வுகளும், ஓய்வு பெற்று செல்லும் மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ்.பி.இரவிச்சந்திராவிற்கான கௌரவிப்பும் இடம்பெற்றது. மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.
கௌரவ அதிதியாக மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ்.பி.இரவிச்சந்திரா, வீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் ஆலய பங்கு தந்தை சி.வி.அன்னதாஸ் அடிகளார், அன்னம்மாள் பாடசாலையின் பழைய மாணவர்களான அருட்தந்தையர்களான அருட்பணி ஜேசுதாசன், அருட்பணி சகாயநாதன், அருட்பணி ஜெயகாந்தன், வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலை அதிபர் உதயகுமார் தவதிருமகள் உட்பட அயல் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
வீச்சுக்கல்முனை, சேற்றுக்குடா, புதூர், திமிலத்தீவு, வலையிறவு போன்ற குடியேற்றக்கிராமங்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட புனித அன்னம்மாள் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை ஸ்தாபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment