மட்டக்களப்பு இந்து கல்லூரியில் மாணவர் பாராளுமன்ற தேர்தல் (15) நடைபெற்றது..
மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 கல்வி வலயங்களில் 2023ம் ஆண்டுக்கான மாணவ பாராளுமன்ற தேர்தல் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில், மட்டக்களப்பு கல்வி வலயத்தின் மட்டக்களப்பு இந்து கல்லூரியில் மாணவர் பாராளுமன்ற தேர்தல் இன்று (15) நடைபெற்றது .
கல்லூரியின் உதவி தேர்தல் ஆணையாளர்களான ஆசிரியர்களின் ஒழுங்கமைப்பு மற்றும் ஆசிரியர்களின் மேற்பார்வையின் கீழ், கல்லூரி அதிபரும் மாணவர் பாராளுமன்ற தேர்தல் ஆணையாளருமான கே.பகீரதன் தலைமையில் தேர்தல் நடைபெற்றது.
பாடசாலை மாணவர்களுக்கு ஜனநாயகம் அதன் பொறுப்புக்கள், சட்டத்தின் ஆதி பத்தியம், வாக்கு உரிமை, வாக்களித்தல் ஆகிவற்றின் முக்கியத்துவம் குறித்து செய்முறை அறிவை வளர்த்து கொள்வதுடன் ஜனநாயக ஆட்சி முறைமை, வாழ்க்கை முறைமையை அனுபவங்களுடாக தெளிவுபடுத்தி கொள்வதற்கான சந்தர்ப்பத்தை மாணவர்களுக்கு வழங்கும் வகையில் வலயம், மாகாண மற்றும் தேசிய மட்டத்தில் உருவாக்கப்படும் மாணவர் பாராளுமன்றத்தின் அடிப்படை நோக்கத்தின் அடிப்படையில், கல்வி அமைச்சின் புதிய சுற்று நிருபம் மற்றும் அறிவுறுத்தல் கோவையின் அடிப்படியில் மாணவர் பாராளுமன்ற தேர்தல் முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment