நாவற்காடு தேசிய பாடசாலை வரலாற்றில், மாவட்ட நிலையில் 10ம் இடத்தைப் பெற்று, மாணவியொருவர் சட்டத்துறைக்குத் தெரிவு......

 நாவற்காடு தேசிய பாடசாலை வரலாற்றில், மாவட்ட நிலையில் 10ம் இடத்தைப் பெற்று, மாணவியொருவர் சட்டத்துறைக்குத் தெரிவு......

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள, நாவற்காடு தேசிய பாடசாலையில் இருந்து, 2022ம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றிய ஆறு மாணவர்கள் 3A சித்திகளைப் பெற்றுள்ளதோடு, 20க்கும் அதிகமான மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலை வரலாற்றில் முதன்முறையான 3A சித்திகளைப் பெற்ற மாணவி, மாவட்ட நிலையில் 10ம் இடத்தைப் பெற்றுச் சட்டத்துறைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மற்றும் சிறப்புச் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டும் நிகழ்வு அதிபர் ஆர்.தியாகரெத்தினம் தலைமையில் நடைபெற்றது.

மாணவர்களை வழிப்படுத்திய ஆசிரியர்கள், அதிபர், உப அதிபர் மற்றும் பெற்றோர்கள் ஆகியோருக்கும் பாடசாலை சமூகம் பாராட்டினை தெரிவித்துள்ளது.

Comments