கல்குடா கல்வி வலயத்தில் விசேட கராத்தே (Taekwondo) பயிற்சி முகாம் .....

 கல்குடா கல்வி வலயத்தில் விசேட கராத்தே (Taekwondo) பயிற்சி முகாம் .....

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா கல்வி வலயத்தின் முறக்கொட்டாஞ்சேனை மகா வித்தியாலயத்தில் தென்கொரியாவின் கராத்தே (Taekwondo) பயிற்றுவிப்பாளர்களால் கல்குடா கல்வி வலயத்தில் மாகாண கராத்தே போட்டிக்காக தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பயற்சியளிக்கப்பட்டது.
கல்குடா வலயக் கல்வி அலுவலகம் ஏற்பாடு செய்த இப்பயிற்சி நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் உடற்கல்விப் பயிற்றுனர் கிருஸ்ணபிரபு, பயிற்றுனர் தவபிரகாஸ், வலயக் கல்வி உடற்கல்விப் பரிசோதகர் வேணு கோபாலராஜ், முறக்கொட்டாஞ்சேனை மகா வித்தியாலயத்தின் உடற்கல்வி ஆசிரியர் ரி. கிஸோத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்பயிற்சிப்பட்டறையில் மாகாண கராத்தே போட்டியில் பங்கேற்கவுள்ள கல்குடா கல்வி வலய மாணவர்கள் பயிற்றுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






Comments