ஐரோப்பிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் நிதி அனுசரணையுடன் STREET CHILD SRI LANKA வினால் நடத்தப்பட்ட உதைப்பந்தாட்ட சமர் - 2023

 ஐரோப்பிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் நிதி அனுசரணையுடன் STREET CHILD  SRI LANKA வினால் நடத்தப்பட்ட உதைப்பந்தாட்ட சமர் - 2023

இலங்கையில் சிறுவர் நலன் சார்ந்து செயற்பட்டுக்கொண்டிருக்கும் STREET CHILD  SRI LANKA  அமைப்பானது ஐரோப்பிய கால்பந்தாட்ட சம்மேளனத்துடன் இணைந்து, மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பாடசாலை மாணவர்களின் காற்பந்தாட்ட திறமையினை வளர்த்தெடுத்து அதன் மூலம் மாணவர்கள் கற்றல் செயற்பாட்டில் ஈடுபடும் ஆர்வத்தினை  ஏற்படுத்தும்  நோக்கில் STAY TO PLAY எனும் செயற்திட்டத்தினை கடந்த 6 மாதங்களாக முன்னெடுத்து வருகின்றது. அத்தோடு இவ் அமைப்பானது ஆரம்ப பிரிவு மாணவர்களின் கற்றல் ஆர்வத்தினை ஊக்குவிக்க  செயற்பாட்டு ரீதியான கற்பித்தல் என்கின்ற எண்ணக்கருவின் கீழ் விஷேட செயற்றிட்டம் ஒன்றினை மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் 6 பாடசாலைகளில் முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் உதைப்பந்தாட்ட விளையாட்டில் முன்னணியில் இருக்கின்ற 6 பாடசாலைகளின் 16 வயதுக்குட்பட்ட அணிகள் தெரிவு செய்யப்பட்டு 3 மாத கால பயிற்சி வழங்கப்பட்டதோடு அவர்களுக்கான உணவுகள், உதைப்பந்தாட்ட விளையாட்டு உபகரணங்கள், அணிகளுக்கான சீருடைகள் என பல இலட்சம் ரூபாய்களை செலவு செய்து இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 இத் திட்டத்தில் மகளீர் உதைப்பந்தாட்ட பயிற்சிக்காக மட்/மமே/முனைக்காடு விவேகானந்த மகாவித்தியாலயமும், மட்/மமே/அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயமும், மட்/மமே/பன்சேனை பாரி வித்தியாலயமும் தெரிவு செய்யப்பட்டதோடு  ஆண்கள்  உதைப்பந்தாட்ட பயிற்சிக்காக மட்/மமே/அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலயமும், மட்/மமே/நாவற்காடு நாமகள் வித்தியாலயமும், மட்/மமே/மகிழவட்டுவான் வித்தியாலயமும் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச் செயற்திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டு பயிற்சிகளை பெற்றிருந்தவர்களின் திறமையினை இனங்காணும் நோக்குடன் மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியொன்றினை குறிப்பிட்ட நிறுவனம் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துடன் இணைந்து முனைக்காடு இராமகிருஷ்ணா விளையாட்டு மைதானத்தில் (10) நடத்தியிருந்தது. 

இச் சுற்றுப்போட்டியானது லீக் முறையில் இடம்பெற்றதுடன் இறுதிப்போட்டியானது எதிர்வரும் 30ம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மகளீர் பிரிவில் இறுதிப்போட்டிக்கு மட்/மமே/ அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயமும், மட்/மமே/பன்சேனை பாரி வித்தியாலயமும் தெரிவு செய்யப்பட்டதோடு  ஆண்கள் பிரிவில் இறுதிப்போட்டிக்கு மட்/மமே/அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலயமும், மட்/மமே/நாவற்காடு நாமகள் வித்தியாலயமும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இன் நிகழ்வுக்கு  அதிதிகளாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் பணிப்பாளர் மதிப்பிற்குரிய Y.ஜெயச்சந்திரன் அவர்களும்,  மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் திட்டமிடலுக்கான பிரதிக்கல்வி பணிப்பாளர் மதிப்பிற்குரிய Y.C.சஜீவன் அவர்களும், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்திக்கான பிரதிக்கல்விப் பணிப்பாளர் மதிப்பிற்குரிய ந.குகதாசன் அவர்களும், STREET CHILD SRI LANKA அமைப்பினது திட்டப்பணிப்பாளர் அ.கஜேந்திரன் அவர்களும்,  BEDS அமைப்பினது பணிப்பாளர்  டிராஜ்  அவர்களும், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் உடற்கல்வி பாடத்துறைக்கான உதவிக்கல்வி பணிப்பாளர்  S. சந்திரகுமார்  அவர்களும், உடற்கல்வி பாடத்துறைக்கான ஆசிரிய ஆலோசகர் ம.அரியதாஸ் அவர்களும்,  மட்/மமே/முனைக்காடு விவேகானந்த மகாவித்தியாலய முதல்வர்  மா.யோகேந்திரன் அவர்களும்,  STREET CHILD SRI LANKA நிறுவன அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.









Comments