நிட்டம்புவை அருகே கஜூகம பிரதேசத்தில் காத்தான்குடி CTB பஸ் விபத்து; சாரதி பலி ......

நிட்டம்புவை அருகே கஜூகம பிரதேசத்தில் காத்தான்குடி CTB பஸ் விபத்து; சாரதி  பலி ......

காத்தான்குடியில் இருந்து கொழும்பு வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு செந்தமான பஸ் மற்றொரு பஸ்ஸிடன் மோதி விபத்து இதில் சாரதி பலியானதுடன் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. 

காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு செந்தமான பஸ் ஒன்றும், நிறுவனமொன்றின் ஊழியர்களை ஏற்றிச்சென்ற சொகுசு பஸ்ஸும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதுடன் 9  பேர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் கண்டி கொழும்பு பிரதான வீதியின் நிட்டம்புவை அருகே கஜூகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது 

விபத்தில்  நிறுவன ஊழியர்களை ஏற்றிச்சென்ற தனியார் பஸ் சாரதி உயிரிழந்துள்ளதோடு பஸ்ஸில் பயணித்த  5 பெண்கள் 4 ஆண்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்




Comments