மட்டக்களப்பு - வாகரை விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயம்.............
மட்டக்களப்பு - வாகரை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்துச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (29) இரவு மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் உள்ள உசன ஏற்றம் எனும் பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.
ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் வாகரை பகுதிக்குச் சென்று மீண்டும் ஊர் திரும்பிச் சென்றபோது படி ரக வாகனத்தில் மோதியுள்ளனர். இவ்விபத்தில் படுகாயமடைந்த இருவரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
Post a Comment