மட்டக்களப்பில் யானை தாக்கி வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர் பலி......

 மட்டக்களப்பில் யானை தாக்கி வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர் பலி......

மட்டக்களப்பு போராதீவுப்பற்று வேத்துச்சேனை கிராமத்திற்குள் புகுந்த காட்டுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தரொருவர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் வெல்லாவெளியில் காரியாலயத்தில் கடமைபுரிந்து வந்த நுவரெலியாரவைச் சேர்ந்த 30 வயதுடைய உத்தியோகஸ்த்தரே உயிரிழந்துள்ளார். மற்றொரு உத்தியோகஸ்த்தர் தெய்வாதீனமாக உயிர் பிழைத்துள்ளார்.

வெல்லாவெளி பொலிசார் மேலதிக விசாணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Comments