டெஸ்ட் போட்டிகளில் இருந்து வனிந்து ஓய்வு!
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபைக்கு வனிந்து ஹசரங்க எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் அடங்கிய கிரிக்கெட் தொடர்களில் கவனம் செலுத்தி தேசிய அணிக்கு தனது சிறந்த பங்களிப்பை வழங்க விரும்புவதாகக் வனிந்து தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட வடிவங்களான T/20 மற்றும் ஒருநாள் போன்ற போட்டிகளில் தனது வாழ்க்கையை நீடிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும், தனது திறமைக்கு ஏற்றவாறு தேசத்திற்கு சேவையாற்றுவதாக நம்புவதாகவும் ஹசரங்க குறிப்பிட்டுள்ளார்.
Comments
Post a Comment