மட்டக்களப்பு சத்துருக்கொண்டானின் புதிய வகை உழுந்து அறுவடை.....
அறிமுகப்படுத்தப்பட்ட புதிய இன உழுந்து அறுவடை நிகழ்வு மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் விவசாய போதனாசிரியர் பிரிவில் இடம்பெற்றது.
சத்துருக்கொண்டான் விவசாய போதனாசிரியர் பிரிவின் பிள்ளையாரடி பிரதேசத்தில், பேரின்பம் சுஜிவா என்பவரின் விவசாய காணியில், புதிய உழுந்து இனமான எம்.ஐ.பி.ஜி-4 பயிரிடப்பட்டது.
விவசாய போதனாசிரியர் தெய்வமனோகரி ரமேசன் தலைமையில் அறுவடை நிகழ்வு இன்று (25) இடம்பெற்றது. பிரதம அதிதியாக மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் வி.பேரின்பராஜா கலந்து கொண்டதோடு, பாடவிதான உத்தியோகத்தர் என்.லட்ஸ்மன், உதவி விவசாய பணிப்பாளர் என்.கணேசமூர்த்தி, சமுர்த்தி முகாமையாளர், மண்முனை வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், பிரதேச விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment