மட்டக்களப்பு நகரில் மாணவர்களின் இலக்கிய ஆற்றலை ஊக்குவிக்கும் இலக்கியப் போட்டிகள் ......

 மட்டக்களப்பு நகரில் மாணவர்களின் இலக்கிய ஆற்றலை ஊக்குவிக்கும் இலக்கியப் போட்டிகள் ......

மட்டக்களப்பு நகர் மண்முனை வடக்கு பிரதேச செயலகம் பிரதேச மாணவர்களின் இலக்கிய ஆற்றலை ஊக்குவிக்கும் விதமான இலக்கியப் போட்டிகள் பிரதேச செயலாளர் V.வாசுதேவன் தலைமையில் டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாடசாலைகளில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட சுமார் 200 பிரதேச மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் கதை கூறல், கிராமிய பாடல், கவிதை பாடல், பாட்டு ஆகிய இலக்கியம் பயன்படுத்தப்படும் போட்டிகளில் தரம் 1 தொடக்கம் 11 வரையில் பிரதேச பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மும்மொழிகளிலும் இடம்பெற்ற இந்நிகழ்வுகளை மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் கலாசார உத்தியோகத்தர்கள் ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





Comments