மட்டக்களப்பில் ஞாயிறு தனியார் கல்வி நிலையங்களுக்குப் பூட்டு: இராஜாங்க அமைச்சர் அதிரடி அறிவிப்பு......
மட்டக்களப்பில் ஞாயிறு தனியார் கல்வி நிலையங்களுக்குப் பூட்டு: இராஜாங்க அமைச்சர் அதிரடி அறிவிப்பு......
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களை மூடி, மாணவர்களின் ஆன்மீகக் கல்விக்கு ஒத்துழைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
தனியார் கல்வி நிலையங்களை ஒழுங்குபடுத்தும் கூட்டத்தின் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இராஜங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
தனியார் கல்வி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துதல் குறித்தான உயர்மட்ட கூட்டம் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் நடைபெற்றது. கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் செல்வி அகிலா கனகசூரியம், வலய கல்வி பணிப்பாளர்கள், பிரதேச செயலாளர்கள், கல்வித்திணைக்கள திட்டமிடல் பிரிவு பிரதி பணிப்பாளர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment