வாழைச்சேனையில் தொழிற்சந்தை மற்றும் தொழிற்பயிற்சி வழிகாட்டல்......

 வாழைச்சேனையில் தொழிற்சந்தை மற்றும் தொழிற்பயிற்சி வழிகாட்டல்......

மனிதவலு வேலை வாய்ப்பு திணைக்களமும் கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய தொழிற்சந்தை மற்றும் தொழிற்பயிற்சி வழிகாட்டல் நிகழ்வு பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மிலின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் பிரதேச செயலக மண்டபத்தில் (02) இடம்பெற்றது.
இதன் போது அரச மற்றும் தனியார் தொழிற்பயிற்சி, தனியார் தொழில் வழங்கல் ஆகிய பதினைந்திற்கும் அதிகமான நிறுவனங்கள் கலந்து கொண்டன.
அவர்கள் தமது சேவைகள் தொடர்பாக இளைஞர் யுவதிகளுக்கு தெளிவுபடுத்தியதுடன் தொழிற்சந்தை மற்றும் தொழிற்பயிற்சி வழிகாட்டல் குறித்த ஆலோசனைகளையும் வழங்கினர்.
பிரதேச செயலக மனிதவள மேம்பாட்டு உத்தியோகத்தர் எஸ்.எல்.சிப்லி அவர்களின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இத்தொழிற்சந்தை மற்றும் தொழிற்பயிற்சி வழிகாட்டல் நிகழ்வில் சுமார் 80 க்கு அதிகமான இளைஞர் யுவதிகள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வு பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம் றுவைத் தலைமையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.






Comments