வெல்லாவெளியில் மாணவர்களுக்கான நாற்று மேடை முகாமைத்துவ பயிற்சி.....
போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயத்தில் விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் நாற்று மேடை முகாமைத்துவம் பற்றிய பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
தெற்கு வலய உதவி விவசாய பணிப்பாளர் எஸ்.சித்திரவேல் வழிகாட்டலில் மேனுஜா குணமகாராஜ் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் பாடசாலையின் அதிபர் ஏ.புட்கரன் விவசாய போதனாசிரியர் ரீ.கோபி தொழில்நுட்ப உத்தியோகத்தர் கே. கிலசன் பாடசாலையின் பிரதி அதிபர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்
இங்கு நாற்று மேடையின் அவசியம், நாற்று மேடை அமைத்தலும் தொற்று நீக்கலும் தொடர்பான செய்முறை ரீதியான தெளிவூட்டல் வழங்கிவைக்கப்பட்டதுடன். மாணவர்கள் மத்தியில் நஞ்சற்ற உணவு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக நாற்று மேடை முகாமைத்துவத்தின் அவசியம் பற்றியும் பயிற்சிகள் வழங்கப்பட்டன
Comments
Post a Comment