ஆயித்தியமலை சதாசகாயமாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்.....
வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு ஆயித்தியமலை சதாசகாய மாதா திருத்தலத்தின் 2023ஆம் ஆண்டிற்கான திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை திருத்தல நிருவாகி அருட்பணி ஈ.ஜேமில்ட்டன் தலைமையில் இடம்பெற்றதுடன், முதல் நாள் திருப்பலியினை இயேசு சபைத் துறவி அருட்பணி லோரன்ஸ் லோகநாதன் அடிகளார் ஒப்புக்கொடுத்துள்ளார்.
ஆயித்தியமலை புனித சதாசகாயமாதா திருத்தலத்தின் திருவிழா ஒகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு செப்டம்பர் 03 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. பெருவிழா கூட்டுத் திருப்பலியினை திருத்தந்தையின் இலங்கைக்கான பிரதிநிதி பிறையன் உடைக்வே மற்றும் மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை அகியோரினால் இணைந்து ஒப்புக்கொடுக்கப்படவுள்ளதுடன், முதல் திருப்பலியானது காலை 5.15 மணிக்கு இடம்பெறவுள்ளது.
திருவிழாவிற்கான பாதயாத்திரை எதிர்வரும் செப்டெம்பர் 02ம் திகதி காலை 5 மணிக்கு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் திருப்பலியைத் தொடர்ந்து வவுணதீவினுடாகவும் மற்றும் செங்கலடி புனித நிக்கலஸ் ஆலயத்தில் காலை 5 மணி திருப்பலியைத் தொடர்ந்து கரடியனாறு ஊடாகவும் திருத்தலம் சென்றடையவுள்ளது.
Comments
Post a Comment