குருவின் சதம்: இமாலய ஓட்ட இலக்கு: சிவானந்தாவை வெற்றிக்கு இட்டுச் சென்றது.......

 குருவின் சதம்: இமாலய ஓட்ட இலக்கு: சிவானந்தாவை வெற்றிக்கு இட்டுச் சென்றது.......

கிழக்கில் பிரபலமான இரு பாடசாலைகள் 28வது தடவையாக சினேகபூர்வ கிரிக்கெட் சமரை சந்தித்து வருகின்றன். மட்டக்களப்பு சிவானந்தா பாடசாலையும், திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியுமே தங்கள் கிரிக்கெட் சமரை நடாத்தி வருகின்றன.

28வது வருட சமரை மட்டக்களப்பு சிவானந்தா பாடசாலையின் ஏற்பாட்டில் பாடசாலை மைதானத்தில் மிகச்சிறப்பாக   (12.08.2023) அன்று நடாத்தி இருந்தது. இவ்வருடம் நடாத்தப்பட்ட இச்சமரில் பல புதிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டு பொன் எழுத்துக்காலால் எழுதப்பட்டும் விட்டன. முதலாவதாக இதுவரை காலமும் நடாத்தப்பட்ட போட்டிகளில் அதி கூடிய ஓட்டங்களை குவித்த அணியாக சிவானந்தா பாடசாலை 297 ஓட்டங்களைகுவித்து வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது.  

இது மாத்திரமின்றி  குருவைஷ்ணவனின் அபார சதம், பொன் அணிகளின் 28 வருட வரலாற்றில் முதல் முதல் பெறப்பட்ட  சதமாக பதியப்பட்டு சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளது..  

முதலில் துடுப்பெடுத்தாடிய சிவானந்தா பாடசாலை 50 ஓவர்கள் முடிவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 297 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது துடுப்பாட்டத்தில் குருவைஷ்ணவன் 108 ஓட்டங்களையும், துவாகரன் 58 ஓட்டங்களையும், நிருக்ஸ் 46 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பதிலுக்கு இமாலய ஓட்ட எண்ணிக்கை எதிர்த்து துடுப்பெடுத்தாட களம் நுழைந்த கோணேஸ்வரா இந்துக்கல்லூரி 37.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 79 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவிக் கொண்டது. பந்து வீச்சில் சிவானந்தா பாடசாலை சார்பாக சதுர்சன் 16 ஓட்டங்களுக்கு 04  விக்கெட்டுக்களை கைப்பற்றி இருந்தார்.

இதன் அடிப்படையில் 28வது சமரை மட்டக்களப்பு சிவானந்தா பாடசாலை வெற்றி கொண்டு சாதனை படைத்துள்ளது.









Photos-Jathu Creation



Comments