ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னை திருத்தல திருவிழா முன்னேற்பாட்டுக் கூட்டம்.....
மட்டக்களப்பு ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னை திருத்தலத்தின் வருடாந்த திருவிழா முன்னிட்டு முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (18) நடைபெற்றது.
எதிர்வரும் 25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி செப்டெம்பர் மாதம் 03 ஆம் திகதி கொடியிறக்கத்துடன் நிறைவு பெறவுள்ள ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னை திருத்தலத்தின் திருவிழா காலங்களில், வருகை தரும் பொதுமக்களுக்கான பொது வசதிகள், பாதுகாப்பு தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசெப் ஆண்டகை மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா ஆகியோரின் தலைமையில் இவ் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
கிறிஸ்தவ மத விவகார அமைச்சின் பணிப்பாளர் சத்துரி பிரின்டோ, உதவி மாவட்டச் செயலாளர் ஏ .நவேஸ்வரன், மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், மண்முனை மேற்கு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் சிவானந்தராஜா, மாவட்ட செயலக கிறிஸ்தவ சமய உத்தியோகத்தர் ரேகா நிருபன், ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னை திருத்தல பங்கு தந்தை இருதயநாதன் ஜெமில்டன் உட்பட பலரும் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
Comments
Post a Comment