பழுதூக்கும் போட்டியில் புனித மிக்கேல் கல்லூரி, மெதடிஸ்த மத்திய கல்லூரி தங்கம் வென்று சாதனை......
அகில இலங்கை ரீதியில் பாடசாலைகள் மட்டத்தில் நடத்தப்பட்ட பழுதூக்கும் போட்டியில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மற்றும் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
விளையாட்டுத்துறை அமைச்சின் அனுசரணையுடன் இந்தப் பழுதூக்கும் போட்டி இடம்பெற்றது. இப்போட்டியில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவன் டரில் ஸ்டீபன் 18 வயதுக்குட்பட்ட 74 கிலோ எடைப்பிரிவில் 155 கிலோவைத் தூக்கி தங்க பதக்கத்தைக் கைப்பற்றியதோடு, மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவன் செல்வராஜா அக்ஸயன் 20 வயதுக்குட்பட்ட 59 எடைப் பிரிவில், 110 கிலோ எடையினை தூக்கி தங்க பதக்கத்தை வென்றுள்ளார்.
Comments
Post a Comment