லியோக்கழகத்தினால் போதனா வைத்தியசாலைக்கு காற்றடைந்த படுக்கை விரிப்புகள் வழங்கப்பட்டன.......

லியோக்கழகத்தினால் போதனா வைத்தியசாலைக்கு காற்றடைந்த படுக்கை விரிப்புகள் வழங்கப்பட்டன.......

மட்டக்களப்பு லியோக்கழகத்தினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு காற்றடைந்த படுக்கை விரிப்புகள்  (17) வழங்கிவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அத்தியாவசிய தேவைப்பாடுகள் குறித்து விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்த உதவிகள் வழங்கப்பட்டன.

மாமாங்கேஸ்வரர் ஆலய உற்சவத்தினை முன்னிட்டு லியோ கழகத்தினால் நடாத்தப்பட்ட ஐஸ்கிரீம் விற்பனை நிலையத்தில் கிடைக்கப்பெற்ற இலாபத்தின் ஒரு பகுதி இந்த உதவிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

லியோக்கழக தலைவர் எஸ்.ஹரீசாந்தன் தலைமையிலான குழுவினர் (17) வைத்தியசாலைக்கு சென்று இந்த உதவிகளை வழங்கிவைத்தனர்.

நிகழ்வில் லியோ கழகத்தின் முன்னாள் தலைவர் பெனிட்டா உட்டப லியோக கழக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.


இதன்போது சத்திரசிகிச்சைஇ அதிதீவிர சிகிச்சை பிரிவின் உத்தியோகத்தர்களிடம் இந்த காற்றடைத்த படுக்கை விரிப்புகள் வழங்கப்பட்டன.

சத்திரசிகிச்சை அதிதீவிர சிகிச்சை பிரிவில் நீண்டகாலமாக மயக்க நிலையில் உள்ள நோயாளிகளுக்கு படுக்கைப்புண் ஏற்படாத வகையில் அவர்களை பராமரிப்பதற்காக

இந்த காற்றடைத்த படுக்கை விரிப்புகள் பயன்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடதக்கது.

Comments