மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு இருநாள் செயலமர்வு......

 மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு இருநாள் செயலமர்வு......

மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் சமுர்த்தி திணைக்களத்தினால் சமுர்த்தி திணைக்களத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு இரு நாள் செயலமர்வு நடாத்தப்பட்டது.

தலைமையக முகாமையாளர் K.தங்கத்துரை தலைமையில் இச் செயலமர்வு இடம் பெற்றது. பிரதேசத்திலுள்ள இரண்டு சமுர்த்தி வங்கிகளையும் சேர்ந்த முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கட்டுபாட்டுச் சபை உறுப்பினர்கள் போன்றோர் இதில் பங்குபற்றினர்.

இணையவழியில் வங்கி நடைமுறைகள், அலுவலக மனிதவள செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது. செயலமர்வில் மாவட்ட செயலக சமுர்த்தி சிரேஸ்ட முகாமையாளர் J.F.மனோகிதராஜ் மற்றும் சமுர்த்தி முகாமையாளர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் வளவாளர்களாக கலந்துகொண்டார்.

Comments