காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டம் தொடர்பான மாவட்ட மட்ட முன்னேற்ற மூளாய்வு கலந்துரையாடல்.......
காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டம் தொடர்பான மாவட்ட மட்ட முன்னேற்ற மூளாய்வு கலந்துரையாடல்.......
காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டம் தொடர்பான மாவட்ட மட்ட முன்னேற்ற மூளாய்வு மற்றும் இயக்குணர் சபை கலந்துரையாடல் என்பன (17) திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் திட்டத்திற்கு தொடர்பான பிரதிப் பணிப்பாளர் கலாநிதி ஆரியதாச, மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் எந்திரி யு.எல்.ஏ.நசார், மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் தனிப்பட்ட செயலாளர் ரீ.தஜீவரன், மட்டக்களப்பு மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, கமநல அபிவிருத்தி பிரதி ஆணையாளர், செயற்திட்டங்களுடன் தொடர்புடைய ஒப்பந்தகாரர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் நீர்ப்பாசன குள அபிவிருத்தி வேலை திட்டங்கள் உரிய காலங்களில் நிறைவேற்றி முடிப்பதில் உள்ள தடைகள் தொடர்பாக இதன் போது விரிவாக ஆராயப்பட்டதுடன், இத்திட்டங்களுடன் சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் தலைவர்கள் இத்திட்டத்திற்கு பூரண ஒத்துளைப்பை வழங்கும் பட்சத்தில் இத்திட்டங்களை மிக விரைவாக பூரணப்படுத்த முடியுமென மாவட்ட அரசாங்க அதிபர் கலாநிதி பத்மராஜா இதன்போது கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments
Post a Comment