விவேகா பழைய மாணவர் சங்கம் நடாத்திய இரத்ததான முகாம்.....

விவேகா பழைய மாணவர் சங்கம் நடாத்திய இரத்ததான முகாம்.....
மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகா பழைய மாணவர் சங்கம் நடாத்திய இரத்ததான முகாம் மட்டக்களப்பு விவேகானந்தா மகளிர் கல்லூரி சுவாமி நடராஜானந்தா மண்டபத்தில் (26) இடம்பெற்றது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியின் வைத்தியர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு குருதிச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இதன் போது மட்டக்களப்பு ஸ்ரீ இராமகிருஷ்ணமிஷன் உதவிப் பொது முகாமையாளர் சுவாமி சுரார்ச்சிதானந்தஜீ மகராஜ், இல்ல மாணவர்கள், தொண்டர்கள் மற்றும் கல்லடி உப்போடை விவேகா பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு குருதியைத் தானமாக வழங்கியிருந்தனர். 




Comments