மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!!

 மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!!

ஈழத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை மஹோற்சவத்தின் கொடியேற்றத் திருவிழா இன்று திங்கட்கிழமை (07) திகதி இடம்பெற்றது.
இக்கொடியேற்ற ஆரம்ப உற்சவத்தின் போது ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டதுடன், வசந்த மண்டப பூசை என்பன இடம்பெற்றது. இன்று நண்பகல் 12.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி பத்து நாட்கள் நடைபெறும் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தில் தினமும் தம்ப பூசை, வசந்த மண்டப பூசை மற்றும் சுவாமி உள் வீதி, வெளி வீதியுலா என்பன நடைபெறவுள்ளது.
அத்தோடு ஆடி அமாவாசை உற்சத்தின் தேர்த்திருவிழா எதிர்வரும் 15ஆம் திகதியும், 16ம் திகதி தீர்த்தோற்சவம் ஆலய தீர்த்த குளத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இக்கொடியேற்ற பூசைகள் யாவும் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள் தலைமையில் இடம்பெற்றது. இவ்வாலயமானது மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்ற ஆலயமாக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.




Comments