காத்தான்குடி - பூநொச்சிமுனை பிரதேசங்களை இணைக்கும் கடற்கரை வீதியில் பாலம் அமைக்கும் நடவடிக்கை ஆரம்பம்......
காத்தான்குடி - பூநொச்சிமுனை பிரதேசங்களை இணைக்கும் கடற்கரை வீதியில் பாலம் அமைக்கும் நடவடிக்கை ஆரம்பம்......
கிராமிய பாலங்கள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் காத்தான்குடி - பூநொச்சிமுனை பிரதேசங்களை இணைக்கும் கடற்கரை வீதியில் பாலம் அமைக்கும் நடவடிக்கை தற்போது மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மழைகாலங்களில் காத்தான்குடி ரிஸ்வி நகர் பிரதேசத்தில் ஒன்றுசேரும் வெள்ள நீர் வடிகால் வாயிலாக கடலை சென்றடைவதற்காக பாலம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான பணிகளை கடந்த 2021 ஆம் ஆண்டு பெதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமதினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதற்கு அமைவாக குறித்த பால நிர்மாணத்திற்கான செலவு மதிப்பீட்டு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வேலைகள் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவினால் குறித்த பணி இடைநிறுத்தப்பட்டிருந்தது.
தற்பொழுது சுற்றாடல் அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமாகிய ஹாபிஸ் நசீரின் அஹமடின் தலையீட்டினால் குறித்த பால நிர்மாணப்பணிகள் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனடிப்படையில் மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர்கள், சுற்றாடல் அமைச்சரின் பிரத்தியோக செயலாளர், பிரதேச மீனவர் அமைப்புக்கள் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் குழு குறித்த இடத்தினை இன்று (16) பார்வையிட்டனர்.
இப்பாலம் நிர்மாணிக்கப்படுவதன் மூலம் இப்பிரதேச மீன்பிடித்துறை பெரும் நன்மை அடையவுள்ளதுடன், காத்தாங்குடி பிரதேசத்தில் தற்போது உருவாகிவரும் வரும் சுற்றுலாத் துறை மேம்பாட்டுக்கு மிகுந்த பங்களிப்புமிக்கதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment