கல்முனையில் மனித பாவனைக்கு உதவாத பழுதடைந்த கொத்தமல்லியை பதுக்கி வைத்திருந்த வர்த்தகர் கைது.....
கல்முனையில் மனித பாவனைக்கு உதவாத கொத்தமல்லியை பதுக்கி வைத்திருந்த வர்த்தக களஞ்சியசாலையொன்றை அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினர் நேற்று செவ்வாய்க்கிழமை (08) திடீரென முற்றுகையிட்டதை தொடர்ந்து, அங்குள்ள கொத்தமல்லி மூடைகள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்யப்பட்டதோடு, களஞ்சியசாலையும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி சாலிந்த பண்டார நவரத்ன வழிகாட்டலில், நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலன் விசாரணை பிரிவு அதிகாரிகளினால் கல்முனை-03, அம்மன் கோயில் வீதியில், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறி மனித பாவனைக்கு உதவாத பழுதடைந்த 84,875 கிலோ கொத்தமல்லி மற்றும் 300 கிலோ நிறச்சாயம் (டை) என்பவற்றை பதுக்கி வைத்திருந்த வர்த்தக களஞ்சியசாலை நேற்று மாலை முற்றுகையிடப்பட்டது.
இதன் போது, பாவனைக்கு உதவாத கொத்தமல்லி, நிறச்சாயம், விற்பனை செய்வதற்கு தயார்ப்படுத்தபட்ட நிலையில் களஞ்சிய அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மூடைகள் கைப்பற்றப்பட்டன.
Comments
Post a Comment